டில்லி உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுக் குழு விவகாரம் குறித்து ஓ பன்னீர் செல்வம் மேல் முறையீடு செய்துள்ளார். சென்ற ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்றும், பொதுச் செயலாளர் தேர்தலுக்குத் தடை விதிக்கக் கோரியும் ஓ.பன்னீர்செல்வம், அவருடைய ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதிமுகவில் இருந்து தங்களை நீக்கியது செல்லாது என அறிவிக்கவும் வலியுறுத்தி இருந்தனர். மனுக்களை விசாரித்த தனி […]