கவுகாத்தி,
13-வது ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் வருகிற அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19-ம்தேதி வரை 10 நகரங்களில் நடைபெற உள்ளது.
அகமதாபாத்தில் அக்டோபர் 5ம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தியா தனது முதல் போட்டியில் அக்டோபர் 8ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் ஆஸ்திரேலியாவுடன் மோத உள்ளது.
இதற்கு முன்னதாக இந்திய அணி இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. அதன்படி முதல் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியுடன் நாளை மறுநாள் மோதுகிறது. இந்த பயிற்சி ஆட்டத்தில் விளையாடுவதற்காக இந்திய அணி கவுகாத்திக்கு சென்றது.
இதற்கிடையில், உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் அஸ்வினுக்கு இடம் கிடைத்துள்ளது. காயம் காரணமாக அக்சர் படேல் விலகியதையடுத்து அஸ்வினுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.