13-வது ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. வரும் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19-ம்தேதி வரை 10 நகரங்களில் போட்டிகள் நடக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 48 போட்டிகள் நடக்கிறது.
லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இதில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். அகமதாபாத்தில் வரும் 5ம்தேதி நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தியா தனது முதல் போட்டியில் அக்டோபர் 8ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் ஆஸ்திரேலியாவுடன் மோத உள்ளது.உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் அஸ்வினுக்கு இடம் கிடைத்துள்ளது. காயம் காரணமாக அக்சர் படேல் விலகியதையடுத்து அஸ்வினுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட இந்திய அணியின் விவரம் வருமாறு: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.ல்.ராகுல் (விக்கெட் கீப்பர்) இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), சூர்ய குமார் யாதவ், ஹர்திக் பண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், ஷர்துல் தாகூர், முகம்மது சமி, முகம்மது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா,