நடிகர் மற்றும் தயாரிப்பாளர் விஷால் அண்மையில் மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்திருந்தார். அதே படத்தை ஹிந்தியில் மஹாராஷ்டிராவில் வெளியிட தம்மிடம் லஞ்சம் கேட்டதாக அவருடைய ஆதங்கத்தை, அவருடைய டுவிட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார். வெள்ளித்திரையில் ஊழல் காட்டப்படுவது பரவாயில்லை. ஆனால் நிஜ வாழ்க்கையில் ஊழல் தவறானது. அதை ஜீரணிக்க முடியாது. குறிப்பாக மும்பை அரசு #CBFC அலுவலகங்களில் மோசமாக ஊழல் நடக்கிறது. எனது #மார்க் ஆண்டனி ஹிந்தி பதிப்பிற்கு 6.5 லட்சம் கொடுக்க வேண்டியிருந்தது. திரையிடலுக்கு 3 லட்சம் […]