ஐசிசி உலகக் கோப்பை 2023: டீம் இந்தியா திட்டம் என்ன? இந்த 5 விஷயங்கள் மாறுமா?

India ICC World Cup 2023: உலகக் கோப்பை தொடருக்கான பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அனைத்து உலகக் கோப்பை 2023 தொடருக்கான அனைத்து போட்டிகளும் இந்தியாவில் நடைபெறுவதால், இந்தமுறை இந்திய அணி கோப்பையை வெல்ல பிரகாசமான வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்திய மண்ணில் நடைபெறும் போட்டிகளில் இந்திய அணியின் வெற்றி சதவீதம் மிக அதிகம். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் மேற்கிந்தியத் தீவுகள், ஆசியக் கோப்பை 2023 மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்களை வென்ற பிறகு, இந்திய கிரிக்கெட் அணி இப்போது நேரடியாக உலகக் கோப்பைக்குள் நுழையவுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் நல்ல பார்மில் இருப்பதால், இந்தியன் கிரிக்கெட் ரசிகர்கள் வெகு உற்சாகமாக இருக்கிறார்கள்.

முதல் முறையாக ஒருநாள் உலகக் கோப்பை (World Cup 2023) இந்திய அணிக்கு ரோஹித் சர்மா தலைமை தாங்குகிறார். 2011க்குப் பிறகு, இந்திய அணி மீண்டும் சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வெல்ல முயற்சிக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மீண்டும் ஒருமுறை சரித்திரம் படைக்க வாய்ப்பு உள்ளது. இந்திய அணி உலகக் கோப்பையில் தனது முதல் போட்டியை அக்டோபர் 8-ம் தேதி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாட உள்ளது. ஆனால் அதற்கு முன் பல கேள்விகள் இந்திய அணியை குறித்து உள்ளன. இந்திய அணியின் திட்டம் என்ன? இந்திய அணியில் களம் இறங்கும் வீரர்கள் யார்? கேப்டன் ரோஹித் சர்மாவின் வியூகம் என்ன? போன்ற விவரங்களை குறித்து பார்ப்போம்.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் (Rahul Dravid) மற்றும் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆகியோர் உலகக் கோப்பை 2023 க்கு முன்பு பல சோதனைகளைச் செய்துள்ளனர். ஒருபுறம் இந்திய அணியை பலப்படுத்த தான், அதுபோன்ற சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன எனக் கூறப்பட்டாலும், மறுபுறம் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் குழப்பமடைந்து உள்ளனர். அதாவது ஒவ்வொரு தொடருக்கும் இந்திய அணியில் வேற வேற வீரர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டது. இதைப் பார்க்கும்போது, ​​​​இந்திய அணியில் எந்த 11 வீரர்கள் உலகக் கோப்பையின் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார்கள் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஏனென்றால் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தின் போது, ​​அதன் பிறகு ஆசிய கோப்பை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளின் போது, ​​இந்த மாற்று வீரர்கள் ‘பரிசோதனை’ நிகழ்த்தப்பட்டது.

இந்திய அணியின் விக்கெட் கீப்பர்ர யார்?

உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் விக்கெட் கீப்பிங் யார் என்ற தொடர்பான சோதனை உச்சத்தில் உள்ளது. இஷான் கிஷான் சிறப்பாக விளையாடினார். ஆனால், கே.எல்.ராகுலின் உடற்தகுதியை பரிசோதிக்க, ஆசிய கோப்பையில் இஷான் கிஷானுக்கு பதிலாக அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டன. இதற்குப் பிறகு, செப்டம்பர் 22 அன்று மொஹாலியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் ஒருநாள் போட்டியில், ராகுல் ஒன்றன் பின் ஒன்றாக பல வாய்ப்புகளை தவறவிட்டார். இந்த போட்டியில், பல சந்தர்ப்பங்களில் அவரால் பந்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பல முறை அவர் பந்தை தவறவிட்டார். விளைவு இந்தூர் போட்டியில்  இஷான் கிஷன் தங்க வைக்கப்பட்டார்.

உலகக் கோப்பை இந்திய அணியில் ஆஃப் ஸ்பின்னர் இல்லை

உலகக் கோப்பை 2023 அணியில் அனைத்து அணிகளும் மாற்றங்களைச் செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 28 ஆகும். இந்த தேதிக்கு பிறகு அணியில் மாற்றம் செய்ய வேண்டுமானால் ஐசிசியிடம் அனுமதி பெற வேண்டும். அதே நேரத்தில், அணிகள் 3 ரீசர்வ் வீரர்களை வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகின்றன. ஐசிசியின் இந்த விதிக்குப் பிறகு, இந்திய அணியில் ஏதேனும் மாற்றம் வருமா என்ற பெரிய கேள்வியும் எழுந்துள்ளது. இந்த நேரத்தில் அக்சர் படேல் காயமடைந்து உள்ளர. அவரது காயம் காரணமாக ஆர். அஷ்வின், வாஷிங்டன் சுந்தர் போன்ற ஆஃப் ஸ்பின்னர்களுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கலாம். உலகக் கோப்பையில் விளையாடும் இந்திய அணியில் உள்ள 15 உறுப்பினர்களில் ஆஃப் ஸ்பின்னர்கள் யாரும் இல்லை. இத்தகைய சூழ்நிலையில், சுழலுக்கு உகந்த ஆடுகளங்களுக்கும், எதிரணியின் இடது கை பேட்ஸ்மேன்களுக்கும் டீம் இந்தியாவில் ஒரு ஆஃப் ஸ்பின்னர் இருப்பது மிகவும் முக்கியம். 

உலகக் கோப்பை இந்திய அணியில் இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லை

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாக உள்ளனர். ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் வேகப்பந்து வீச்சுக்கு ஒரு விருப்பமாக இருப்பார். ஆனால், தற்போது அணியில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் இல்லை. 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் ஜாகீர் கான், ஆஷிஷ் நெஹ்ரா போன்ற இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தனர். ஜாகீர் 2011 உலகக் கோப்பையில் 9 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தினார். போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்தார்.

இந்திய அணியில் விளையாடப்போகும் 11 வீரர்கள் யார்?

உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் விளையாடப்போகும் 11 வீரர்கள் யார் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஏனெனில் கடந்த சில ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி தொடர்ந்து தனது அணி வீரர்களை மாற்றி வருகிறது. இதைப்பற்றி கேப்டன் ரோஹித் கூறுகையில், அணியை பலப்படுத்த தான் இந்த ‘பரிசோதனை’ மேற்கொள்ளப்படுகிறது எனக் கூறியுள்ளார். ஆனால் தொடர்ந்து அணியின் வீரர்களை மாற்றுவது இந்திய அணிக்கு சுமையாக இருக்கக்கூடாது என ரசிகர்கள் நினைக்கிறார்கள்.

உலகக் கோப்பை அணிக்கான பரிசோதனை தொடருமா? 

செப்டம்பர் 27ஆம் தேதி ராஜ்கோட்டில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் உலகக் கோப்பை அணியில் இடம்பெறாவிட்டாலும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். இதுபோன்ற சூழ்நிலையில், பரிசோதனை தொடர்பாகவும் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதே நேரத்தில், உலகக் கோப்பைக்கு முந்தைய தொடரில் இந்திய அணி தொடர்ந்து பேட்டிங் வரிசையை மாற்றி வருகிறது. இருப்பினும், அக்டோபர் 8 ஆம் தேதி நடைபெறும் ஆஸ்திரேலியாவின் ஒருநாள் உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் அணியில் விளையாடும் சிறந்த 11 வீரர்கள் யார் என்பது தெரிய வரும்.

2023 உலகக் கோப்பைக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ஷுப்மான் கில், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், மொஹத் யாதவ் . சிராஜ், முகமது. ஷமி, அக்சர் படேல் மற்றும் ஷர்துல் தாக்கூர்.

உலகக் கோப்பை 2023: இந்திய அணி விளையாடும் போட்டிகள் அட்டவணை

>> 8 அக்டோபர் – ஆஸ்திரேலியா – சென்னை
>> 11 அக்டோபர் – ஆப்கானிஸ்தான் – டெல்லி
>> 14 அக்டோபர் – பாகிஸ்தான் – அகமதாபாத்
>> 19 அக்டோபர் – பங்களாதேஷ் – புனே
>> 22 அக்டோபர் – நியூசிலாந்து – தர்மசாலா
>> 29 அக்டோபர் – இங்கிலாந்து – லக்னோ
>> 02 நவம்பர் – இலங்கை – மும்பை
>> நவம்பர் 5 – தென்னாப்பிரிக்கா – கொல்கத்தா
>> நவம்பர் 12 – நெதர்லாந்து – பெங்களூரு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.