குவஹாத்தி, அசாமைச் சேர்ந்த 16 வயது சிறுமியை, வீட்டுப் பணிப்பெண்ணாக பணி அமர்த்தியதுடன் அவரை நிர்வாணமாக்கி, அடித்து துன்புறுத்திய ராணுவ வீரர் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர்.
வடகிழக்கு மாநிலமான அசாமைச் சேர்ந்தவர் சைலேந்திர யாதவ். இவர், ராணுவத்தில் மேஜராக உள்ளார். கடந்த 2021ல் ஹிமாச்சல பிரதேசத்தின் பாலம்பூருக்கு மாற்றப்பட்டார்.
கொடுமை
ஹிமாச்சல பிரதேசத்தின் ஹப்லாங்கில் மனைவி, குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அசாமைச் சேர்ந்த 16 வயது சிறுமியை, கடந்த ஆறு மாதங்களுக்கு முன் வீட்டுப் பணிக்காக பணி அமர்த்தினர்.
அந்தச் சிறுமியை தம்பதி அடித்து துன்புறுத்தினர். பற்களை உடைத்தும், உடலில் தீயால் சுட்டும் பல்வேறு கொடுமைகளை அரங்கேற்றி உள்ளனர்.
சிறுமி பசியால் வாடிய போது, குப்பையில் வீசிய உணவை உண்ணச் செய்துள்ளனர். பல நேரங்களில் அந்த சிறுமியை, நிர்வாணப்படுத்தியும் கொடுமைப்படுத்தி உள்ளனர்.
கடந்த 24ம் தேதி, அந்த சிறுமி தன் குடும்பத்தினரை காண அசாமிற்கு வந்தபோது, தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவரது பெற்றோர் அளித்த புகாரின்படி, போலீசார் வழக்குப் பதிவு செய்து, அந்த தம்பதியை கைது செய்தனர்.
தீக்காயம்
மருத்துவ பரிசோத னையில் அந்த சிறுமியின் மூக்கு, பற்கள் உடைக்கப்பட்டதுடன், நாக்கும் ஆழமாக வெட்டப்பட்டுள்ளது தெரியவந்தது.மேலும், உடலில் பல்வேறு இடங்களில் தீக்காயங்கள் இருந்தன.
இதற்காக அந்த சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், கொடுமைப்படுத்திய ராணுவ வீரர் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதில், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் உறுதிச்செய்யப்பட்டதையடுத்து போக்சோ, குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்தியது உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவர்களை சிறையில் அடைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்