ஜெய்சங்கரை சந்திக்கவுள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன்: எதற்கு தெரியுமா? | Ahead of Indian Foreign Minister S Jaishankar-Anthony Blinken Meet, US Says Canada Stand Made Clear

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாஷிங்டன்: அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனை மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று(செப்.,28) நேரில் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பில், காலிஸ்தானிய பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பற்றி ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த வாரம் ஐ.நா. பொது சபையின் கூட்டத்தொடர் நடந்தது. இதில், மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார். இந்நிலையில் இவர்களது சந்திப்பு நடக்க உள்ளது. இது பற்றி, அமெரிக்க வெளியுறவு துறையின் செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறும்போது, இரு தலைவர்கள் இடையேயான விவாதம் பற்றி எதுவும் தெரிவிக்க முடியாது என மறுத்து விட்டார்.

மேலும், அவர் கூறியதாவது: நாங்கள் இந்திய அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளோம். கனடா விசாரணைக்கு ஒத்துழைக்க அவர்களை ஊக்குவித்துள்ளோம், மேலும் ஒத்துழைக்க அவர்களை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறோம். கனடாவின் குற்றச்சாட்டுகளை அடிப்படையற்றவை என மறுத்ததுடன், நிஜ்ஜார் படுகொலையில் குறிப்பிட்ட தகவலை வழங்கினால், அதுபற்றி இந்தியா விசாரணை மேற்கொள்ளும். என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper –>

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.