புதுடில்லி,புதுடில்லியின் வட -கிழக்கு பகுதியில் உள்ள சுந்தர் நகரியைச் சேர்ந்தவர் பழ வியாபாரி அப்துல் வாஜித், 60. இவர் அப்பகுதி காவல் நிலையத்தில் நேற்று புகார் மனு அளித்தார்.
அதில், ‘தன் 26 வயது மகன் இஷாரை, திருடன் என்ற சந்தேகத்தில் சிலர் கட்டி வைத்து அடித்ததில் இறந்துவிட்டார். இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்’ என, குறிப்பிட்டிருந்தார்.
போலீஸ் துணை கமிஷனர் டிர்கி கூறியதாவது:
நேற்று முன்தினம் மாலை அப்துல் வாஜித் வீட்டுக்கு சென்றபோது, அவரது மகன் இஷார் உடலில் அடிபட்ட காயங்களுடன் அலறித் துடித்தபடி இருந்துள்ளார்.
விசாரித்ததில், ஜி – 4 பிளாக்கை சேர்ந்த சில இளைஞர்கள், இஷார் திருட வந்ததாக கருதி கம்பத்தில் கட்டி வைத்து கம்பால் சரமாரியாக அடித்துஉள்ளனர்.
இதையடுத்து, இரவு 7:00 மணியளவில் அவ்வழியே சென்ற இஷாரின் பக்கத்து வீட்டை சேர்ந்த அமிர், அவரை வீட்டில் சேர்த்துள்ளார்.
அங்கு இஷார் இறந்ததை அடுத்து குரு தேஜ்பகதுார் மருத்துவமனைக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இது தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் இஷாரை தாக்கிய நபர்களை தேடி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement