மனிதநேயம் நிரைந்த உயர்ந்த மானுடப் பெறுமானங்களை கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட நபிகளாரின் பிறந்தநாளை உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் மிகுந்த மகிழ்ச்சியுடனும் சமயக் கிரியைகளுடனும் கொண்டாடும் இவ்வேளையில், அவர் போதித்த வாழ்க்கைத் தத்துவத்தின் மூலம் சமூகத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே அவரை கௌரவிப்பதற்கான சரியான வழியாகும்.
சுபீட்சம், விடுதலை, சமாதானம், மகிழ்ச்சி மற்றும் மன அமைதி ஆகியவற்றைக் கொண்டு வரும் ஒரு முழுமையான வாழ்க்கை முறையை மனித குலத்திற்கு வழங்கிய நபிகளாரின் மனிதாபிமான வாழ்க்கைத் தத்துவத்தை சமூக நன்மைக்காக முன்னெப்போதையும் விட பயன்படுத்த வேண்டிய காலகட்டம் இதுவாகும்.
உலக மக்களால் போற்றப்படும் நபிகளாரின் வாழ்க்கை முன்மாதிரிகளை மதிக்கும் இலங்கை உட்பட உலகெங்கிலும் வாழும் இஸ்லாமியர்களின் நல்வாழ்வுக்கு எனது பிரார்த்தனைகள்.
தினேஷ் குணவர்தன (பா.உ)
பிரதமர்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு