நாட்டின் சிறந்த சுற்றுலா கிராமமாக காந்தளூர் தேர்வு| Kanthalur has been selected as the best tourist village in the country

மூணாறு:கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் கடைக்கோடியில் தமிழக எல்லையோரம் உள்ள காந்தளூர் ஊராட்சியில் காய்கறி, பழ சாகுபடி முக்கிய தொழில். ஆப்பிள் உட்பட பல்வேறு பழங்கள் கால நிலைக்கு ஏற்ப விளையும் என்பதால், சுற்றுலா பயணியர் விரும்பி வாங்கிச் செல்வர்.

அப்பகுதி சமீப காலமாக சுற்றுலாவில் பெரும் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில், சிறந்த சுற்றுலா கிராமங்களை தேர்வு செய்து, மத்திய அரசு விருது வழங்கி வருகிறது.

நாட்டில் உள்ள 2.5 லட்சம் ஊராட்சிகளில், 767 ஊராட்சிகள் போட்டியிட்டன. அதில், தேர்வு செய்யப்பட்ட ஐந்து சுற்றுலா கிராமங்களுக்கு தங்கம், 10 கிராமங்களுக்கு வெள்ளி, 20 கிராமங்களுக்கு வெண்கலம் விருதுகள் வழங்கப்பட்டன.

எட்டு மாதங்களாக நடந்த பல்வேறு சுற்று போட்டிகளின் முடிவில், சிறந்த சுற்றுலா கிராமமாக காந்தளூர் ஊராட்சி தேர்வாகி தங்க விருதை வென்றது.

புதுடில்லியில் நடந்த விழாவில் மத்திய சுற்றுலா துறை செயலர் வித்யாவதிவிடம், காந்தளூர் ஊராட்சி தலைவர் மோகன்தாஸ் விருதை பெற்றுக்கொண்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper –>

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.