புதுடெல்லி: கடந்த 1994-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ரிங்கு துக்கா (54). இவர் அருணாச்சல்பிரதேசத்தில் உள்நாட்டு விவகாரங்களுக்கான முதன்மை செயலராக நியமிக்கப்பட்டார். இவரது கணவர் சஞ்சீவ் கிர்வாரும் ஐஏஎஸ் அதிகாரி.
இருவரும் வளர்ப்பு நாயுடன் நடைபயிற்சி செல்ல டெல்லி தியாகராஜ் மைதானத்தில் இருந்து விளையாட்டு வீரர்களை காலி செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, கிர்வார் கடந்தாண்டு டெல்லியிலிருந்து லடாக்கிற்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில், ரிங்கு துக்காவுக்கு மத்திய அரசு கட்டாய ஓய்வு அளித்துள்ளது. ரிங்குவின் பணிப் பதிவின் அடிப்படையில் பொதுநலன் கருதி கட்டாய ஓய்வு பெற வைப்பதற்கு மத்திய அரசுக்கு உரிமை உள்ளது.