EPFO Online Claim அடிக்கடு நிராகரிக்கப்படுகிறதா? எளிய ஆன்லைன் செயல்முறை இதோ

EPFO Online Claim: இந்தியன் ரயில்வே உள்ளிட்ட பிற நிறுவனங்களைப் போலவே, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பும் (EPFO) அதன் உறுப்பினர்களுக்காக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்கள் தங்களது பிஎப் க்ளெய்மை (PF Claim) பெறும்போது பல சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது. இந்த சிக்கலை கவனத்தில் கொண்ட EPFO, இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது. மண்டல அலுவலகங்களில் கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்படும் செயல்முறையில் ஏற்படும் தாமதத்தை குறைக்க வேண்டும் என இபிஎஃப்ஓ அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் கோரிக்கைகளை மீண்டும் மீண்டும் அல்லது நியாயமற்ற காரணங்களுக்காக நிராகரிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்கப்பட்டுள்ளது.

EPFO வழிகாட்டுதல்கள்

பிராந்திய அலுவலகங்களுக்கு எழுதிய கடிதத்தில், க்ளைம்கள் (EPFO Online Claim) எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாகச் செயல்படுத்தப்படுவதையும், ஒரே க்ளெய்ம் பல காரணங்களுக்காக நிராகரிக்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்களையும் EPFO ​​இப்போது வழங்கியுள்ளது.

– ஒவ்வொரு க்ளெய்மையும் முதல் நிகழ்விலேயே முழுமையாக ஆராய வேண்டும் என்று இபிஎஃப்ஓ கூறியுள்ளது.

– முதல் நிகழ்விலேயே நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து உறுப்பினருக்கு தெரிவிக்கப்பட வேண்டும் 

– பெரும்பாலும் ஒரே கோரிக்கை வெவ்வேறு காரணங்களுக்காக மீண்டும் மீண்டும் நிராகரிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

EPFO கள அலுவலகங்களுக்கு அளித்த அறிவுறுத்தல்

மேலும், பிராந்திய அல்லது கூடுதல் பிஎஃப் ஆணையர் தனது அதிகார வரம்பில் உள்ள கோரிக்கைகள் நிராகரிப்படுவதற்கு பொறுப்பாவார். பிஎஃப் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதற்கான அறிக்கையை ஒவ்வொரு மாதமும் மண்டல அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை தேவையான காலக்கெடுவிற்குள் செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்யவும் கள அலுவலகங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

EPFO Claim: உறுப்பினர்களின் புகார்கள்

பல உறுப்பினர்கள் மற்றும் பங்குதாரர்கள் இது குறித்து EPFO ​​க்கு புகார் அளித்துள்ளனர். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணம் வரவில்லை என புகார்கள் வந்துள்ளன. தேவையற்ற காலதாமதம் ஏற்படுவதாகவும், க்ளெய்மை திரும்ப பெறும் செயல்முறையில் தாங்கள் பல அசவுகரியங்களை அனுபவிப்பதாகவும் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். பல உறுப்பினர்கள் சில PF அலுவலகங்களில் பின்பற்றப்படும் ஒழுங்கற்ற நடைமுறைகளை குறிப்பிட்டு காட்டியுள்ளனர். 

ஆன்லைனில் பிஎஃப் பணத்தை எடுப்பதற்கான செயல்முறை:

– முதலில் www.epfindia.gov.in என்ற இனையதளத்திற்குச் செல்லவும்.

– முகப்புப் பக்கத்தில் உள்ள ஆன்லைன் அட்வான்ஸ் க்ளைம் என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

– இப்போது https://www.epfindia.gov.in/site_en/index.php க்குச் சென்று லாக் இன் செய்யவும். 

– UAN மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.

– ‘ஆன்லைன் சர்வீசஸ்’ டேபை க்ளிக் செய்யவும்

– படிவம் 31ஐத் தேர்ந்தெடுத்து பிஎஃப் பணத்தை எடுப்பதற்கான காரணத்தைக் குறிப்பிடவும்.

– நீங்கள் எவ்வளவு பணம் எடுக்க விரும்புகிறீர்கள் என்பதை எழுதுங்கள்.

– வங்கி நகலைப் பதிவேற்றவும்.

– வீட்டு முகவரியை பூர்த்தி செய்து, ஆதார் சரிபார்ப்பை (ஆதார் வெரிஃபிகேஷன்) பூர்த்தி செய்யவும்.

– Get Aadhaar OTP என்பதைக் கிளிக் செய்யவும்.

– இப்போது ஆதார் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணில் OTP வரும், அதை உள்ளிடவும்.

– இந்த வழியில் உங்கள் செயல்முறை முடிவடையும். மேலும் சிறிது நேரம் கழித்து உறுதிப்படுத்தலுக்கான அழைப்பைப் பெறுவீர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.