சாம்சங் பண்டிகை காலத்திற்கு முன்பே, தனது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தென்கொரிய பிராண்டான சாம்சங் மொபைலுக்கு இந்தியாவில் மிகச் சிறந்த வரவேற்பு இருக்கிறது. இது வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து அதற்கு ஏற்ற அம்சங்களுடன் மிட்ரேஞ் விலையில் அவ்வப்போது புதிய மொபைல்களை அறிமுகப்படுத்தும். அதேநேரத்தில் ஏற்கனவே மார்க்கெட்டில் இருக்கும் மொபைல்களுக்கு திடீரென அதிரடி ஆபர் கொடுத்து வாடிக்கையாளர்களை சந்தோஷப்படுத்தும்.
அந்த வகையில் சில Galaxy M மற்றும் Galaxy F மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன்களின் விலையை திடீரென குறைக்க முடிவு Samsung செய்துள்ளது. Galaxy F13, Galaxy F04, Galaxy M13 மற்றும் Galaxy M04 ஆகியவை விலை குறைக்கப்பட்டவை. தொலைபேசிகளின் விலை எவ்வளவு குறைக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
Samsung Galaxy F13, Galaxy M13, & Galaxy M04 விலையில் வீழ்ச்சி
Galaxy M04 மற்றும் Galaxy F04 ஆகியவை முதலில் ரூ. 8,499 மற்றும் ரூ. 7,499 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் இப்போது, தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் நிறுவனம் (Samsung) இரண்டு சாதனங்களின் விலையையும் ரூ.6,499 ஆகக் குறைத்துள்ளது. சாம்சங்கின் அதிகாரப்பூர்வ இணையதளமான Amazon (Galaxy M04), Flipkart (Galaxy F04) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ரீடெய்ல் ஸ்டோர்களில் இந்த சிறப்பு தள்ளுபடியுடம் மிகக் குறைந்த விலையில் சாம்சங் போனை பெறலாம்.
Galaxy M13 மற்றும் Galaxy F13
மறுபுறம், Galaxy M13 மற்றும் Galaxy F13 ஆகியவை அறிமுகத்தின் போது சற்று விலை அதிகம். இருப்பினும், சிறப்பு சலுகை விலையில், ஸ்மார்போன் ரூ.9,199 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த சலுகை விலை ஆஃபர் பண்டிகை காலத்துக்கு முன்னதாகவே வந்துள்ளது. மற்ற இரண்டு சாதனங்களைப் போலவே, Galaxy M13 இன் புதிய விலையும் Amazon இல் காணலாம், மேலும் Galaxy F13 இன் புதிய விலை Flipkart இல் பட்டியலிடப்படும்.
Galaxy M13 மற்றும் Galaxy F13 ஆகியவை ஒரு பெரிய 6,000mAh பேட்டரி பேக்கைக் கொண்டுள்ளன, இது நீண்ட கால பேட்டரி ஆயுளை வழங்குகிறது. Galaxy F13 சிறந்த வீடியோ மற்றும் கேமிங் அனுபவங்களை வழங்கும் முழு HD டிஸ்ப்ளேவையும் கொண்டுள்ளது. மறுபுறம், Galaxy M04 மற்றும் Galaxy F04 சிறந்த செயல்திறனை வழங்கும் 4GB RAM உடன் வருகின்றன.
சாம்சங் நிறுவனம், இந்த மாத தொடக்கத்தில், 5ஜி மொபைல்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் வரையிலான தள்ளுபடியை அறிவித்தது. இந்த இரண்டு போன்களும் கேமிங் மற்றும் கேமரா உபயோகத்தில் சிறந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. Galaxy A54 5G மற்றும் Galaxy A34 5G ஆகிய இரண்டு போன்களுக்கும் தலா 2 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கொடுக்கப்பட்டது.