இந்தியா முதலீடு செய்வதற்கான சிறந்த இடமாக இருக்கிறது. உலகம் முழுவதிலும் உள்ள பல நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்து வருகின்றன.
அந்த வகையில் இந்தியப் பங்குச் சந்தையில் அதிகமாக முதலீடு செய்யும் வெளிநாடுகளில் முதல் 10 நாடுகளின் பட்டியலை பார்ப்போம்.
வெளிநாடுகள் இந்தியாவில் முதலீடு செய்துள்ள மொத்த தொகை 48,23,001 கோடி ரூபாய்.
இதில் அமெரிக்காவே இந்தியாவில் அதிகளவு முதலீடு செய்துள்ளது. அமெரிக்கா முதலீடு செய்துள்ள தொகை 22,69,903 கோடி ரூபாய்.
இரண்டாவதாக இந்தியாவில் சிங்கப்பூர் முதலீடு செய்யதுள்ள தொகை 5,23,564 ரூபாய்.
மூன்றாவதாக மேற்கு ஐரோப்பாவில் உள்ள லக்சம்பர்க் 4,22,458 கோடி ரூபாயை இந்தியாவில் முதலீடு செய்திருக்கிறது.
4-வது மொரிஷியஸ் ரூ.3,72,561 கோடி, 5-வதுஅயர்லாந்து ரூ.2,92,278 கோடி, 6-வது இங்கிலாந்து ரூ.2,89,220 கோடி முதலீடு செய்துள்ளன.
கனடா 1,77,335 கோடி ரூபாயை முதலீடு செய்து ஏழாவது இடத்தில் உள்ளது.
எட்டு, ஒன்பது, பத்தாவது இடங்களில் நார்வே, பிரான்ஸ், ஜப்பான் இடம் பெற்றிருக்கிறது. இந்நாடுகள் முதலீடு செய்த தொகை 1,73,949 கோடி, 1,61,422 கோடி, 1,30,987 கோடி ரூபாய் ஆகும்.