டொரான்டோ ”இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்துவதில், கனடா உறுதியாக உள்ளது. அதே சமயம், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு விசாரணையில், எங்களுடன் இணைந்து இந்தியா பணியாற்ற வேண்டும்,” என, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
வட அமெரிக்க நாடான கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரே என்ற இடத்தில், கடந்த ஜூன் மாதம், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதில், இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக கனடா பார்லி.,யில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது. இதனால், இந்தியா – கனடா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று கூறியதாவது:
சர்வதேச அளவில் வளர்ந்து வரும் பொருளாதார சக்தியாக இந்தியா உள்ளது.
இதை யாராலும் நிராகரிக்க முடியாது. மேலும், உலக அரங்கில் இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது.
இந்தோ- – பசிபிக் கூட்டுக்கொள்கையின்படி, இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்துவதில் கவனமாக உள்ளோம்.
அதே சமயம், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கின் விசாரணையில், எங்களுடன் இந்தியா இணைந்து பணியாற்றி ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement