வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஒட்டாவா: ‛‛இந்தியாவுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்த கனடா உறுதிபூண்டுள்ளது ” என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இந்தியா – கனடா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் தூதரக உயர் அதிகாரியை வெளியேற உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் மான்ட்ரேல் நகரில் நிருபர்களிடம் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாவது: வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா உள்ளது. புவி அரசியலில் முக்கியபங்கு வகிக்கிறது. இந்தோ பசுபிக் பிராந்திய ஒத்துழைப்பின்படி, இந்தியாவுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்த முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.
உலக அரங்கில் வளர்ந்து வரும் இந்தியாவுடன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, அந்நாட்டுடன், ஆக்கப்பூர்வமான உறவில் கனடாவும், அதன் நட்பு நாடுகளும் ஈடுபடுவது முக்கியமானது என நான் கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement