வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இம்பால்: மணிப்பூரில் கலவரம் பாதித்த பகுதிகளில் படிப்படியாக இயல்புநிலை திரும்புவதை அடுத்து, இரவு நேர ஊரடங்கு மட்டும் அமலில் இருக்கும் வகையில் கட்டுப்பாடு தளர்த்தப்
பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, கடந்த மே 3ல் இட ஒதுக்கீடு தொடர்பாக, மெய்டி – கூகி பிரிவினரிடையே மோதல் வெடித்தது.
இதைத் தொடர்ந்து நடந்த வன்முறையில், 175க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த ஜூலையில் காணாமல் போன, ஒரு மாணவரும், மாணவியும் கொல்லப்பட்டு சடலமாக கிடக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த கொலையை கண்டித்து, மணிப்பூர் தலைநகர் இம்பாலில் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் உள்ளிட்டோர், போலீஸ் உதவி கமிஷனர் மற்றும் பா.ஜ., அலுவலகங்களை சூறையாடியதால் பதற்றம் மேலும் அதிகரித்தது.
இதையடுத்து, கிழக்கு மற்றும் மேற்கு இம்பால் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, மத்திய ரிசர்வ் படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இம்பாலில் உள்ள ஹெய்ங்காங் பகுதியில், காலியாக உள்ள முதல்வர் பைரேன் சிங்கின் மூதாதையர் இல்லத்தை இரவு தாக்க முயன்ற மர்ம கும்பலை போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர்.
இந்நிலையில், பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துகளை வாங்க வசதியாக, காலை, 5:00 மணி முதல் இரவு, 11:00 மணி வரை கிழக்கு மற்றும் மேற்கு இம்பால் மாவட்டங்களில் இன்று ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement