புதுச்சேரி: நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை கள உதவியாளர் பணி எழுத்து தேர்வுக்கான அனுமதி சீட்டு பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அலுவலக செய்திகுறிப்பு: நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு வரும் 8ம் தேதி மாநிலத்தில் 22 மையங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இத்தேர்விற்கான அனுமதி சீட்டை, தேர்வர்கள் https://recruitment.py.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விபரம் அல்லது உதவி தேவைப்படும் தேர்வர்கள், வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 0413-2233338 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement