வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: காவிரி ஒழுங்காற்றுக்குழு குழு பரிந்துரைப்படி காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடகா கூறியுள்ளது. அதேநேரத்தில், நிலுவையில் உள்ளதையும் சேர்த்து வினாடிக்கு 12,500 கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியது.
புதுடில்லியில் காவிரி மேலாாண் ஆணைய கூட்டம் கூடியது. இதில் இரு மாநில அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கர்நாடக தரப்பில், ‛‛ ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைப்படி காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியாது. புதிய பார்முலாவை பின்பற்றி நீர் பற்றாக்குறையை அளவிட்டு பட்டியலை ஏற்க வேண்டும்” என வலியுறுத்தினர்.
ஆனால், தமிழக தரப்பில், ‛‛ நிலுவையில் உள்ள நீரை சேர்த்து விநாடிக்கு 12,500 கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும். அக்., மாதம் திறக்க வேண்டிய 22.14 டி.எம்.சி., தண்ணீரையும் உரிய நேரத்தில் திறக்க வேண்டும். கர்நாடகா வழங்கும் பற்றாக்குறை அளவு பரிந்துரையை ஏற்கக்கூடாது ” என்றனர்.
இந்த கூட்டத்தில், கர்நாடகா தண்ணீர் திறக்க முடியாது எனக்கூறியதைத் தொடர்ந்து இரு மாநில அதிகாரிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement