சென்னை: கோடம்பாக்கம் முதல் போரூர் வரை சாலை பழுதுபார்க்கும் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் பணிகளால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அத்துடன் சாலை பணிகள், மழைநீர் வடிகால் பணிகள் என எந்தவொரு பணிகளும் முழுமையாக முடிவடையாததால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். சமீப காலமாக அவ்வப்போது பெய்து வரும் மழையால், சாலைகளில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. […]