டில்லி காய்கறி மார்க்கெட்டில் தீ | Fire in Delhi vegetable market

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: டில்லியில் நாட்டின் மிகப்பெரிய காய்கறி சந்தையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

டில்லி ஆசாத்பூரில் நாட்டிலேயே மிகப்பெரிய காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கிருந்து டில்லியைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.இந்த காய்கறி மாரக்கெட்டில் இன்று(29 ம் தேதி) மாலை பயங்கர பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உயிர்சேதம் குறித்த தகவல் வெளியாகவில்லை.

தகவலறிந்த தீயணைப்புபடையினர் 11 வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைக்க போராடி வருகின்றனர். தற்போது தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், தீவிபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper –>

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.