வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லியில் நகைக்கடை ஒன்றில் ரூ.25 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் சத்தீஸ்கரை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.12.5 லட்சம் பணமும், 18 கிலோ நகைகளும் மீட்கப்பட்டன.
தெற்கு டில்லியின் ஜங்புரா பகுதியில் உமாராவ் ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடை உள்ளது. கடந்த செப்.,26ம் தேதி காலை கடை உரிமையாளர் வந்து கடையை திறந்த போது, அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கடையில் இருந்த ‛ஸ்டிராங் ரூம்’ எனப்படும் பாதுகாப்பு பெட்டக அறை சுவர் துளையிட்டு இருப்பதையும், நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டதையும் அறிந்து போலீசில் புகார் அளித்தார்.
கொள்ளையர்கள் சிசிடிவி கேமரா பதிவுகளை துண்டித்துவிட்டு, பாதுகாப்பு பெட்டக அறைக்குள் இருந்த தங்கம், வைரம் நகைகளை கொள்ளையடித்து சென்றது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.25 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டது. கொள்ளையர்களை போலீசார் தேடிவந்த நிலையில் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சத்தீஸ்கரை சேர்ந்த இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அதில் இருவரும் கொள்ளையடித்தது உறுதியானது. அதில் ஒருவரிடம் இருந்து ரூ.12.5 லட்சம் பணம் மற்றும் 18 கிலோ மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளை போலீசார் கைப்பற்றினர். இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement