’தெறி மாடல்… 5500 எம்ஏஎச் பேட்டரி.. சோனி கேமரா.. 24GB ரேம்’ குட்டி ரோபோ தான் இந்த ஸ்மார்ட்போன்

ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்கள் நெருங்குவதால் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அடுத்தடுத்து தங்களின் புதிய பிராண்டுகளை களமிறக்க இருக்கின்றன. அந்தவகையில் ஒன்பிளஸ் நிறுவனமும் புதிய ஸ்மார்ட்போன் மற்றும் இயர்பட்ஸூகளை களமிறக்க இருக்கிறது. குறிப்பாக அதனுடைய புதிய தயாரிப்பான ஒன்பிளஸ் ஏஸ் 3 ஸ்மார்ட்போனை மார்க்கெட்டில் களமிறக்குகிறது. முதலில் சீனா மார்க்கெட்டில் வெளியாகும் இந்த போன், அதன்பிறகு இந்தியா உள்ளிட்ட உலக மார்க்கெட்டில் களம் காண இருக்கிறது.

ஒன்பிளஸ் ஏஸ் 3 சிறப்பம்சங்கள்

ஒன்பிளஸ் ஏஸ் 3 (OnePlus Ace 3) ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R) எனும் பெயரில் அறிமுகமாகிறது. பக்காவான குவாலிட்டி கேமரா மற்றும் சூப்பர் பவர் ரேம், தரமான பேட்டரி ஆகியவற்றுடன் பட்ஜெட் விலையில் அறிமுகமாக இருக்கிறது. இந்த தகவல் தான் இப்போது ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் ஹாட் டாப்பிக். ஒன்பிளஸ் ஏஸ் 3 ஸ்மார்ட்போனில் 6.74-இன்ச் ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே, 1.5 ரெசொலூஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கும். போனின் டிஸ்பிளே தான் மற்றொரு ஹைலைட். இதனுடைய தனிதுவமான அம்சம் நிச்சயம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என்று கூறப்படுகிறது. சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 (Qualcomm Snapdragon 8 Gen 2) சிப்செட் இருப்பதால் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங்களுக்கு பயன்படுத்த உகந்த மொபைலாக இருக்கும். இந்த நோக்கத்துக்காக மொபைலை வாங்க விரும்புவபவர்கள் தாராளமாக ஒன்பிளஸ் ஏஸ் 3 மொபைலை தேர்வு செய்யலாம். 

ஒன்பிளஸ் ஏஸ் 3 கேமரா

கேமராவைப் பொறுத்தவரையில்  50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்890 சென்சார் ( Sony IMX890 sensor) + 8எம்பி அல்ட்ரா வைடு ஓம்னிவிஷன் ஓவி8டி10 (OmniVision OV8D10) சென்சார் + 32எம்பி டெலிபோட்டோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு இந்த மொபைலில் இருக்கும். இதன் மூலம் அட்டகாசமான புகைப்படம் மற்றும் வீடியோக்களை வாடிக்கையாளர்கள் எடுக்க முடியும். யூசர்களுக்கு சிறந்த செல்பி அம்சத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே 16 எம்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. வீடியோ அழைப்புகளையும் மேற்கொள்ளலாம். இதுதவிர, டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், ஐபி68 ரேட்டிங் அம்சங்களும் இருக்கும்.

ஒன்பிளஸ் ஏஸ் 3 பேட்டரி

பேட்டரியைப் பொறுத்தவரையில் 5500 எம்ஏஎச் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், சார்ஜ் செய்ய 100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கூட உள்ளது. குறிப்பாக இந்த போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும். மேலும், நீண்ட நேரம் பேட்டரிபேக் கொடுக்கும்.  5ஜி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை ஏசி, புளூடூத் 5.2, என்எப்சி அம்சங்களும் இருக்கும். அதேபோல் கலர்ஓஎஸ் 14 (ColorOS 14) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தைக் ஒன்பிளஸ் ஏஸ் 3 ஸ்மார்ட்போன் கொண்டிருக்கும். 2 4ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை ஸ்டோரேஜ் இருக்கும். விலையை பொறுத்தவரை இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என மார்க்கெட் தகவல்கள் கூறுகின்றன. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.