தோனி குறித்த ரகசியம்
இந்திய அணியின் தலைச்சிறந்த கேப்டன்களில் ஒருவராக இருக்கும் தோனி, தன்னுடைய அணியின் ஆஸ்தான பவுலராக ஸ்ரீசாந்தை வைத்திருந்தார். 2007 ஆம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை மற்றும் 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை ஆகியவற்றை இந்திய அணி தோனி தலைமையில் வெல்லும்போது, அந்த அணியில் ஸ்ரீசாந்த் பிளேயிங் லெவனில் இடம்பெற்றிருந்தார். அவர், தோனி இவ்வளவு பெரிய வெற்றியெல்லாம் பெறுவதற்கு முன்பு அவருடன் பழகியதையும், நடந்த உரையாடலை முதன்முறையாக வெளிப்படையாக பேசியுள்ளார்.
ஸ்ரீசாந்த் பேட்டி
இது குறித்து அவர் ஸ்போர்ஸ்கீடாவிடம்பேசும்போது, ” தோனி இவ்வளவு பெரிய உயரம் அடைவதற்கு முன்பே தோனியை எனக்கு தெரியும். நாங்கள் இருவரும் ஒன்றாக 2003 காலகட்டங்களில் துலீப் டிராபி விளையாடியது முதல் பல போட்டிகளில் ஒன்றாக விளையாடி இருக்கிறோம். ஒருமுறை அவர் இந்திய அணிக்கு விளையாட வாய்ப்பு கிடைத்திருந்த சமயம். அது இந்தியா – பாகிஸ்தான் போட்டி. கொச்சியில் நடைபெற இருக்கிறது. அப்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ஜான் ரைட் இருக்கிறார். அவர், என்னை உட்பட சில வேகப்பந்துவீச்சாளர்களை தேர்வு செய்து இந்திய வீரர்களுக்கு வலைப் பயிற்சியின்போது பந்துவீசுமாறு கூறினார். நான் உள்ளிட்ட சிலர் தோனிக்கு பந்துவீசினோம். அப்போது தோனியுடன் ஜாலியாக பேசும் வாய்ப்பு கிடைத்தது.
இந்தியா – பாகிஸ்தான் போட்டி
இந்தியா – பாகிஸ்தான் போட்டி என்றாலே அனல் பறக்கும். அதன்கூடவே மைதானம் முழுவதும் ’சச்சின்…. சச்சின்’ என்ற குரல்கள் தான் எங்கும் ஒலிக்கும். இது முன்பே தோனிக்கும் தெரியும். போட்டிக்கு ஒரு நாள் முன்பாக வலைப்பயிற்சி முடித்து நாங்கள் பேசிக் கொண்டிருதபோது, தோனி எங்களிடம் சொன்னார் “இது என்னை நிரூபிக்க வேண்டிய தருணம். இந்த வாய்ப்பை நான் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என தெரிவித்தார். அதற்கு நான் சொன்னேன் ” தோனி பாய் கவலைப்படாதீங்க, உங்களால முடியும். என மனசு என்னம்மோ சொல்லுது நீங்கள் நிச்சியம் நன்றாக விளையாடுவீர்கள்” என்று கூறினேன். என்ன மாயமோ தெரியவில்லை, அடுத்த போட்டியில் அவர் சதமடித்தார். அதன்பிறகு இந்தியா ஏ அணிக்காக விளையாடும்போது அடுத்தடுத்து சதம் விளாசி அபார சாதனை படைத்து இந்திய அணியில் தனக்கான இடத்தை நிரந்தரமாக்கிக் கொண்டார்.
ஸ்ரீசாந்த் நெகிழ்ச்சி
அதன்பிறகு நடந்து எல்லாம் வரலாறு. நானும் தோனியுடன் இரண்டு உலக கோப்பைகள் வெல்லும் வரை அவருடன் விளையாடி இருக்கிறேன். அது என் வாழ்க்கையில் மறக்க முடியாத பசுமையான நினைவுகள். எப்போது பெஞ்சில் அமர்ந்து சக வீரர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும்போதும், அவர்களை நான் ஊக்கப்படுத்தும் பழக்கம் என்னிடம் உண்டு. அது தோனிக்கும் செய்திருக்கிறேன்” என தெரிவித்தார். மேலும், நீங்கள் இந்திய அணியில் இப்போது விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள், நாங்களும் இந்திய அணிக்காக விளையாட வரும்வோம் என அவரிடம் கூறியபோது, நீச்சயம் வர வேண்டும். உங்களாலும் முடியும். அதுவரை கடினமாக உழைத்துக் கொண்டே இருங்கள் என்று எனக்கும் இன்னும் சக வீரர்களுக்கும் அவர் உற்சாகமூட்டினார் என்றும் தோனி தெரிவிதார்.