பெங்களூரு, பெங்களூரு விமான நிலையத்துக்குள், 14 தோட்டாக்களுடன் வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் அமலேஷ் ஷேக், 32; உடுப்பி மணிப்பாலில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பணியாற்றுகிறார். இவர், திரிபுரா மாநிலம் அகர்தலா செல்ல, பெங்களூரு விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் மாலை வந்தார்.
விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், பயணியர் உடைமைகளை சோதனை செய்தனர்.
அமலேஷ் வைத்திருந்த பையில், பயன்படுத்தப்படாத 14 துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தன.
இதுகுறித்து அவரிடம் விசாரித்தனர்.
‘இந்த பையை என்னுடன் வேலை செய்த சிலர் எடுத்துச் சென்றனர்; தோட்டாக்கள் எப்படி வந்தது என்று தெரியவில்லை’ என்றார்.
அவர் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை கைது செய்த போலீசார், 14 தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். அமலேஷ் மீது ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அமலேஷின் பின்னணி குறித்து மணிப்பால் போலீசாரிடம், விமான நிலைய போலீசார் தகவல் கேட்டுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement