
ஹாலிவுட்டுக்கு செல்லும் யஷ்
கன்னட சினிமாவில் இரண்டாம் வரிசை நடிகராக இருந்தவர் யஷ். 'கேஜிஎப்' என்ற ஒரே படத்தின் மூலம் பான் இந்தியா நட்சத்திரம் ஆனார். இந்த படத்தின் இரண்டாம் பாகமும் பெரிய வெற்றியை பெற்றது. அடுத்து அவர் மலையாள இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அவர் ஹாலிவுட் இயக்குனர் மற்றும் நடிகர் ஜே.ஜே.பெர்ரியை லண்டனில் சந்தித்து பேசி உள்ளார். அதோடு அவரது பயிற்சி கூடத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுக்கும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
ஜே.ஜே.பெர்ரி 'டே ஷிப்ட்', 'தி கில்லர்ஸ் கேம்' போன்ற ஹாலிவுட் படங்களை டைரக்டு செய்தவர். பல படங்களில் நடித்தும் உள்ளார். 'ஸ்பை', 'ஜான் விக்-2', 'தி டார்க் டவர்', 'பிளட்ஷாட்', 'அவதார்-2' போன்ற பல படங்களுக்கு ஆக்ஷன் டைரக்டராக பணியாற்றி உள்ளார். ஏற்கனவே யஷ் ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது.