Apollo: மூளைச்சாவு அடைந்த அரசு ஊழியர்; உடல் தானம் செய்ததை அடுத்து முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

தேனி அருகே நடந்த விபத்தில் மூளைச்சாவு அடைந்த அரசு ஊழியர் வடிவேலின்(43) உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன் வந்துள்ளதையடுத்து அவரது உடல், தமிழக முதல்வர் அறிவித்த படி முழு அரசு பாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

தேனி மாவட்டம், சின்னமனுர் காந்தி நகர் காலனியை சேர்ந்தவர் வடிவேல். தேனி கலெக்டர் அலுவலகத்தில் முதுநிலை ஆய்வாளராக பணிபுரிந்தார். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட பொருளாளராகவும் இருந்தார். இவரது மனைவி பட்டுலட்சுமி தேனி மாவட்ட நீதிமன்றத்தில் பணிபுரிந்து வருகிறார். செப் 23-ல் வடிவேல் அலுவலக பனி முடிந்து டூவீலரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தப்போது சீலையம்பட்டி அருகே சென்றபோது ரோட்டின் குறுக்கே வந்த மாடு அவரது டூவீலரில் மோதியது கீழே விழுந்த வடிவேல் தலை,காது, மூக்கு பகுதியில் பலத்த காயமடைந்தார். சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

மூளைச்சாவு அடைந்த அரசு ஊழியர்

அங்கிருந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் தீவிர சிகிச்சைக்காக மதுரை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். அதன்பின் அவரது குடும்பத்தினரிடம், வடிவேலின் உடல் நிலை மருத்துவமனையின் கவுன்சிலர்கள்  பேசினர். அப்போது, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்தால் இன்னும் பலர் பயனடைய வாய்ப்பு உள்ளது என்று எடுத்துக் கூறினர். அதனை ஏற்றுக் கொண்ட அவரது குடும்பத்தினர் மிகுந்த வருத்தத்துடன் உடல் உறுப்புக்களை தானம் செய்ய சம்மதித்தனர்.

முழு மனதாக உடல் உறுப்புக்களை தானம் செய்வோர் உடல் அரசு முழு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ள நிலையில், வடிவேலின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அவரது இறுதி ஊர்வலத்தில் தமிழக மருத்துவம் மருத்துவக்கல்வி, மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தேனி மாவட்ட ஆட்சியர் திரு.சஜீவனா I.A.S., மதுரை அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேல் மற்றும் அப்போலோ மருத்துவமனை – மதுரை டிவிஷன் coo திரு நீலக்கண்ணன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ள நிலையில், தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பு உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் விதமாக உள்ளது.

மூளைச்சாவு அடைந்த அரசு ஊழியர்

தினமும் பலர் தங்களது உடல் உறுப்புக்களை தானமாக தந்து உதவும் நிலையில், முதல்வர் அறிவிப்புக்கு பின் இறந்த வடிவேலின் உடல் உறுப்புக்களை தானமாக வழங்க சம்மதித்த அவரது குடும்பத்தினருக்கு மனமார நன்றிகளை அப்போலோ குழுமத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், உடல் உறுப்பு தானம் என்ற மகத்தான சேவையை ஊக்குவிக்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் என்று அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்களுக்கும் இந்த சமயத்தில் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக அப்போலோ குழுமத்தினர் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.