Bigg Boss Contestant Exclusive: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 போட்டியாளர்கள் பட்டியல் இதோ!

நாளை மறுநாள், அக்டோபர் முதல் தேதி தொடங்க இருக்கிறது பிக் பாஸ் தமிழ் சீசன் 7.

இந்தாண்டு ஒன்றுக்கு இரண்டு வீடுகள். இந்த வீடுகளை நிரப்ப இருக்கும் போட்டியாளர்கள் யார் என்பதுதான் இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கும் சிலரது பெயர்களை நாம் ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். இதோ சில கூடுதல் போட்டியாளர்கள் குறித்த எக்ஸ்க்ளூசிவ் தகவல்கள்

கூல் சுரேஷ்

கூல் சுரேஷ்:

எந்த சினிமா நிகழ்ச்சி என்றாலும் ஆஜர் ஆகி விடுகிறவர். சமீபத்தில் ஆடியோ லாஞ்சில் ஆங்கருக்கு மாலை அணிவித்து சர்ச்சையில் சிக்கியது நினைவிருக்கலாம். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கன்டென்டுக்குப் பஞ்சமே வைக்க மாட்டார் என நம்பலாம்.

அனன்யா ராவ்

அனன்யா ராவ்

பிக் பாஸ் ஓ.டி.டி.யில் டைட்டில் வென்ற பாலாஜி முருகதாசின் ஃபேமிலி ஃப்ரண்ட் என்கிறார்கள். பாலாஜி முருகதாஸ் பிக் பாசிஸ் வந்த சீசன் தொட்டே பிக் பாசில் கலந்து கொள்ள ஆசைப்பட்டவருக்கு இப்போது வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ஐஷு

பிக் பாஸ் அமீரை எடுத்து வளர்த்த தம்பதியினரின் மகள். அமீர் கலந்து கொண்ட பிக் பாஸ் நிகழ்ச்சியின் போதே இவர் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தார் என்கிறார்கள்.

ஐஷு

விஷ்ணு

சின்னத்திரையில் என்ட்ரியாகி இப்போது பெரிய திரைக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர். ‘ஆபிஸ்’ விஷ்ணு என்றால் சட்டென அடையாளம் சொல்லும் டிவி ஏரியா. விஜய் டிவியிலிருந்து அப்படியே ஜீ தமிழ் பக்கம் வந்து ;சத்யா’ தொடரில் நடித்தார். இப்போது மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சிக்கு வருகிறார்.

விஷ்ணு

‘சத்யா’ தொடரில் நடித்த போது உடன் நடித்த ஆயிஷாவுடன் காதல் எனக் கிசுகிசுக்கப் பட்டு, பிறகு அது பிரேக் அப் ஆகி விட்டதாகவும் சொல்லப்பட்டது. கடந்த சில சீசன்களிலேயே முயற்சி செய்தவருக்கு தற்போதுதான் தன் பெரிய கேட்டைத் திறந்து விட்டிருக்கிறார் பிக் பாஸ்.

சரவணன்

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் கடைக்குட்டித் தம்பி. தொடர் முடிவடைவதால் அங்கிருந்து பிக் பாஸ் செல்கிறார். சீரியலில் இவருக்கும் ஜோடியாக நடிக்கும் தீபிகாவுக்கும் நல்ல கெமிஸ்ட்ரி என்பதால் தீபிகாவும் வருவாரா என்கிற எதிர்பார்ப்பு பிக் பாஸ் ரசிகர்களிடன் இருக்கிறது.

சரவணன்

ஆனால் நமக்குக் கிடைத்த தகவல் படி இப்போதைக்கு சரவணன் மட்டும் கன்ஃபார்ம். தீபிகா வைல்ட்கார்டில் என்ட்ரி ஆனாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

பவா செல்லதுரை

பவா செல்லத்துரை:

பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறையாகச் செல்லும் எழுத்தாளர். ஆனந்த விகடனில் இதழில் சமீபத்தில் வெளியான `சொல் வழிப்பயணம்’ தொடரை எழுதியவர். எழுத்தாளர், கதைசொல்லியான இவரது என்ட்ரி நிகழ்ச்சியில் வித்தியாசமானதாக இருக்குமென்று மட்டும் தெரிகிறது.

அக்ஷயா உதயகுமார்

இவர் லவ் டுடே படத்தில் இவானாவின் தங்கையாக நடித்தவர். இவரும் பிக் பாஸில் கலந்துகொள்கிறார்.

அக்ஷயா உதயகுமார்

இவர்கள் தவிர, மேலும் சிலரும் கலந்துகொள்கிறார்கள். அவர்கள் யார் என்பது நாளை காலை விகடன் இணையதளத்தில் வெளியாகும்.

இந்த போட்டியாளர்களில் உங்கள் விருப்பத்துக்குரியவரை கமென்ட்டில் பதிவிடுங்கள்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.