சென்னை: அக்டோபர் 1ந்தேதி (நாளை) முதல் குடிநீர் வரி கட்டணங்கள் பொதுமக்களிடம் இருந்து ரொக்கமாக பெறப்பட மாட்டாது என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. கட்டணங்களை டிஜிட்டல் முறை அல்லது காசோலையில் செலுத்த வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், 01.10.2023 முதல் சென்னை குடிநீர் வாரியத்திற்குச் செலுத்த வேண்டிய குடிநீர் வரி மற்றும் கட்டணங்களை இ-சேவை மையங்கள் மற்றும் டிஜிட்டல்/காசோலை/வரைவோலைகளாக மட்டுமே செலுத்திட வேண்டும். இதற்காக அனைத்து பகுதி அலுவலகங்களில் செயல்பட்டுவரும் […]