வாஷிங்டன்,
இதனிடையே அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் நேற்றுமுன்தினம் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளின்கனை சந்தித்தார். இரு தரப்பு உறவுகள் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
எனினும் இந்த இருதரப்பு சந்திப்பின் போதும், அதன் பிறகு கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தபோதும் இருவரும் இந்தியா-கனடா இடையேயான மோதல் குறித்து மவுனம் காத்தனர்.
இரு நாட்டு மந்திரிகள் சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், “இந்தியாவின் ஜி-20 தலைமையேற்பு, இந்தியா-மத்திய கிழக்கு- ஐரோப்பிய ஒன்றிய பொருளாதார வழித்தடத்தை உருவாக்குதல் உள்ளிட்டவை குறித்து பிளிங்கனும், ஜெய்சங்கரும் பேசினர். இந்த வழித்தடத்தை உருவாக்குவதில் வெளிப்படையான, நீடித்த, உயர் தர கட்டமைப்பு முதலீடுகள் பற்றி இருவரும் ஆலோசித்தனர். பாதுகாப்பு, விண்வெளி மற்றும் தூய்மையான எரிசக்தி ஆகிய துறைகளில் இந்தியா-அமெரிக்கா ஒத்துழைப்பின் தொடர்ச்சியான முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்” என கூறினார்.