கோயம்பேடு, கோயம்பேடு சந்தைக்கு, நாட்டின் பல மாநிலங்களில் இருந்து காய், கனி, மலர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பழங்களும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்து காய், கனி, பழங்களும் விற்பனைக்கு வருகின்றன.
தினமும், ஆயிரக்கணக்கான நுகர்வோர்கள் மற்றும் வியாபாரிகள் பொருட்களை வாங்கி செல்கின்றனர். அதேபோல, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுகின்றனர்.
இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த கோயம்பேடு சந்தை வளாகம், ஒரு நாள் மழைக்கே மழை நீருடன் கழிவு நீர் தேங்கி குளம் போன்று காட்சியளிக்கிறது.
கோயம்பேடு சந்தையை பொறுத்தவரையில் மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், முறையாக துார் வாரப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
மேலும், காய்கறி கழிவுகள் முறையாக அகற்றப்படுவதில்லை. இதனால், தற்போது பெய்து வரும் மழைக்கு, சந்தை வளாகம் சேறும், சகதியுமாக மாறி, சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
இதனால், வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொற்றுநோய் அபாயமும் உருவாகியுள்ளது. எனவே, இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண அதிகாரிகள் முன்வர வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement