டைகர் ஷெராப் படத்தின் தமிழ் டீசரை வெளியிட்ட த்ரிஷா
பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப், கிர்த்தி சனோன், அமிதாப்பச்சன், ரகுமான், ஸ்ருதி மேனன் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கண்பத். விகாஸ் பாகி என்பவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் அக்டோபர் 20ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. தமிழ் டீசரை நடிகை திரிஷா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஆக்ஷன் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.