நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தற்போது 2- வது சீசன் நடைபெற்று வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக, தொடர் அரசு விடுமுறை காரணமாக பயணிகளின் வருகை வழக்கத்தைவிட தொடர்ந்து அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது.
இந்த நிலையில், தென்காசியிலிருந்து பேருந்து மூலம் ஊட்டிக்கு வருகைத் தந்த சுற்றுலா பயணிகள் 54 பேர் , ஊட்டியைச் சுற்றிப் பார்த்து விட்டு குன்னூர் மலைப்பகுதியில் இன்று மாலை சொந்த ஊர் திரும்பியுள்ளனர். அப்போது 9 -வது கொண்டை ஊசி வளைவைக் கடந்துக் கொண்டிருந்த பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்துள்ளது. அப்போது பேருந்தில் பயணித்த அனைவரும் அலறித் துடித்துள்ளனர்.

சுமார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்தைக் கண்ட வாகன ஓட்டுநர்கள், பேருந்தில் சிக்கித்தவித்த பயணிகளை மீட்டனர். படுகாயத்துடன் மீட்கப்பட்ட பயணிகளில் 8 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும், பலர் காயத்துடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
குன்னூர் மலைப்பாதையில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்த விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பேருந்து பள்ளத்தில் விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.