வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ‘பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவதில் வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு ஆர்வம் இல்லை என்பது ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மை’ என இந்தியா கவலை தெரிவித்துள்ளது.
உலக நாடுகளுக்கு பருவநிலை மாற்றம் பெரும் சவாலாக உள்ள நிலையில் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டின் 28வது கூட்டம் வரும் டிசம்பரில் மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில் நடக்கிறது.
‘காப் – 28’ என்ற பெயரில் நடத்தப்படும் இந்த மாநாட்டில் கால நிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை சமாளிப்பது குறித்த ஆலோசனைகள் இடம்பெற உள்ளன.
இந்த மாநாட்டில் நம் நாட்டின் சார்பில் வழங்கப்பட உள்ள ஆலோசனைகள் தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:
பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவதில் வளர்ச்சி அடைந்த பணக்கார நாடுகளுக்கு ஆர்வமும் விருப்பமும் இல்லை. இதை அந்த நாடுகள் ஒப்புக் கொள்ள வேண்டும்.
வறுமை வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கு இடையேயான சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் இடைவெளிகள் ஆகியவை களையப்பட வேண்டும்.
அதேசமயம் உலகளாவிய காலநிலை நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
துாய்மை இந்தியா திட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி அழைப்பு
‘நாளை நடக்கவுள்ள துாய்மை இந்தியா திட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்’ என பொதுமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக தன் சமூக வலைதள பதிவில் அவர் கூறியுள்ளதாவது:முக்கியமான துாய்மை முயற்சிக்காக நாளை காலை 10:00 மணிக்கு நாங்கள் ஒன்று கூடுகிறோம். துாய்மை இந்தியா திட்டம் என்பது அனைவருக்கும் பகிரப்பட்ட பொறுப்பு. நம் அனைவரின் ஒவ்வொரு முயற்சியும் முக்கியமானது. துாய்மையான எதிர்காலத்தை உருவாக்க இந்த உன்னத முயற்சியில் சேரவும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement