
பொங்கல் ரேஸில் இருந்து விலகவில்லை – ரவி தேஜா படக்குழு உறுதி
கார்த்திக் கட்டாம்னெனி இயக்கத்தில் நடிகர் ரவி தேஜா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ஈகிள்'. அனுபமா பரமேஸ்வரன், நவ்தீப், மதுபாலா, காவ்யா தபார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பீபுல் மீடியா பேக்டரி தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தாவ்சந்த் இசையமைக்கிறார்.
ஏற்கனவே இந்த படம் 2024 பொங்கல் அன்று வெளியாகும் என அறிவித்ததைத் தொடர்ந்து சமீபகாலமாக இது பொங்கல் ரேஸில் இருந்து விலகியதாக தகவல் வெளியாகி வந்த நிலையில் தற்போது ஈகிள் திரைப்படம் 2024 ஜனவரி 13ம் தேதி அன்று வெளியாகிறது என தேதியுடன் படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர்.