சண்டிகர், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி பஞ்சாபில் விவசாயிகள், தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்றும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்தில் பஞ்சாபில் பெய்த கனமழைக்கு, பயிர்கள் சேதமடைந்ததன. பாதிக்கப்பட்ட விவசாயிகள் உரிய இழப்பீடு வழங்குமாறு கோரிக்கை விடுத்தும், இதுவரை அரசு நிறைவேற்றவில்லை.
இதையடுத்து, பல்வேறு விவசாய அமைப்பினர் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு, விளைபொருட்களுக்கு உரிய ஆதார விலை நிர்ணயிப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று நாள் ரயில் மறியல் போராட்டத்தை அறிவித்தனர்.
கடந்த, 28ல் துவங்கிய இந்த போராட்டத்தால் பஞ்சாபில் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டன. நேற்று மூன்றாவது நாளாக, ரயில் மறியல் போராட்டம் நீடித்தது. பரீத்கோட், மோஹா, குருதாஸ்பூர், ஜலந்தர், அமிர்தசரஸ், பெரோஷேபூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன; சில ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான பயணியர் பாதிக்கப்பட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement