பாலக்காடு: ‘2025ம் ஆண்டுக்குள், கேரளாவை ஏழைகள் இல்லாத மாநிலமாக மாற்றும் வகையில், திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன,’ என, முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
கேரள மாநிலம், திருச்சூர் லுார்து தேவாலய அரங்கில், திருச்சூர், மலப்புரம், பாலக்காடு ஆகிய மாவட்டங்களின் வளர்ச்சி திட்டங்கள், துறைசார் ஆய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், அமைச்சர்கள், தலைமை செயலாளர் வேணு ஆகியோர் கலந்து கொண்டனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது:
தீவிர வறுமை ஒழிப்பால், கேரளா அபார முன்னேற்றம் அடைந்துள்ளது. வரும் நவ., 1ம் தேதிக்குள் மாநிலத்தில் உள்ள ஏழைகள், தீவிர வறுமையில் இருந்து மீட்கப்படுவார்கள். வரும் நவ., மாதத்திற்குள் இந்த விஷயத்தில் கணிசமான முன்னேற்றம் அடைய முடியும்.
2025ம் ஆண்டுக்குள் கேரளாவை ஏழைகள் இல்லாத மாநிலமாக மாற்றும் வகையில், திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பல்வேறு துறைகளில் கேரளா சாதனைகள் படைத்து வருகிறது.
அரசு எடுக்கும் முடிவுகளை சரியான நேரத்தில் செயல்படுத்த வேண்டும். செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை மிக முக்கியம். திட்டங்களை நிறைவேற்றுவதன் வாயிலாக, மக்களிடையே திருப்தி ஏற்படுத்த முடியும். இவ்வாறு, அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement