வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு: ஆதி்த்யா எல்1 விண்கலம் பூமியிலிருந்து 9.2 லட்சம் கி.மீ. தூரத்தை கடந்து செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூரியனை பற்றி விரிவாக ஆய்வு செய்ய, ‘ஆதித்யா எல்1’ விண்கலத்தை, பி.எஸ்.எல்.வி., – சி 57 ராக்கெட் உதவியுடன், இஸ்ரோ கடந்த செப்.,2ல் புவி வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. இந்த விண்கலம் நான்கு மாதங்கள் பயணித்து, பூமியில் இருந்து, 15 லட்சம் கிலோ மீட்டர் துாரம் உள்ள, ‘லாக்ரேஞ்ச் பாயின்ட் எல்1’ என்ற இடத்தில் நிறுத்தப்பட்டு, அங்கிருந்தபடி சூரியனை ஆய்வு செய்யும்.
சூரியனுக்கும், பூமிக்கும் இடையிலான துாரம் 15 கோடி கிலோ மீட்டர். தற்போது ஆதித்யா எல்.1 விண்கலம் 9.2 லட்சம் கி.மீ. தூரத்தை கடந்த பயணித்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது
சூரியனுக்கும் பூமிக்கு இடையே எல்-1 புள்ளியை நோக்கி ஆதித்யா விண்கலம் பயணித்து வருவதாகவும், பூமியின் ஈர்ப்பு தாக்கத்திற்கு அப்பால் இஸ்ரே விண்கலம் அனுப்புவது இரண்டாவது முறையாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரத்தை இஸ்ரோ 4-வது முறையாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement