ஆடவர் ஹாக்கி: இந்தியா அபார வெற்றி!
இன்றைய குரூப் சுற்றுப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 10-2 என அபாரமாக வீழ்த்தியது இந்திய ஆடவர் ஹாக்கி அணி. இதுவரை ஆடிய நான்கு போட்டிகளில் 46 கோல்கள் அடித்திருக்கிறது இந்திய அணி!
இறுதிப்போட்டியில் இந்திய பேட்மிண்டன் அணி
பரபரப்பான அரையிறுதிப் போட்டியில் 3-2 என தென்கொரியாவை வென்று இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றது இந்திய ஆடவர் பேட்மிண்டன் அணி. இறுதிப்போட்டியில் பலம்பொருந்திய சீன அணியை எதிர்கொள்ளும்!
தடகளத்தில் மேலும் இரண்டு பதக்கங்கள்!
10000 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் இந்தியாவின் கார்த்திக் குமார் (28:15.38) வெள்ளிப்பதக்கமும், குல்வீர் சிங் (28:17.21) வெண்கலப் பதக்கத்தையும் வென்று அசத்தல்!
அரையிறுதிக்கு தகுதிப்பெற்றார் நரேந்தர்!
ஆடவர் குத்துச்சண்டை (91 கிலோ பிரிவு) காலிறுதிப் போட்டியில் ஈரான் நாட்டைச் சேர்ந்த இமானை 5:0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிப்பெற்றார் இந்தியாவின் நரேந்தர்!
தங்கம் வென்ற இந்தியா!
ஆடவர் ஸ்குவாஷ் போட்டியின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது இந்திய அணி!
ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதிப்பெற்றார் லோவினா போகோஹைன்!
மகளிர் குத்துச்சண்டை (75 கிலோ பிரிவு) காலிறுதி போட்டியில் 5:0 என்ற புள்ளிகள் பெற்று தென்கொரிய வீராங்கனை சுயோன் சியாங்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை லோவினா போகோஹைன்! இதன் மூலம் அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதிப்பெற்றார்!
டென்னிஸ்: தங்கம் வென்ற இந்திய இணை!
கலப்பு இரட்டையர் டென்னிஸ் இறுதிப்போட்டியில் சீன தைப்பேவின் என் ஷூவோ லியாங் – ஹூவாங் இணையை 2-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது ரோஹன் போபண்ணா – ருத்துஜா போஸ்லே இணை!
மணிகா பத்ரா தோல்வி!
மகளிர் ஒற்றையர் டேபிள் டென்னிஸின் காலிறுதி ஆட்டத்தில் சீனா வீராங்கனை யிடி வாங்கிற்கு எதிராக 2-4 என்ற செட் கணக்கில் தோல்வியைத் தழுவினார் இந்தியாவின் மணிகா பத்ரா!
இந்திய மகளிர் வாலிபால் அணி தோல்வி!
மகளிர் வாலிபால் ஆட்டத்தில் வடகொரியா அணிக்கு எதிராக தோல்வியைத் தழுவியது இந்திய அணி. முதல் செட்டை வென்ற போதும் அடுத்த மூன்று செட்களையும் இழந்து 1-3 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தது!
துப்பாக்கிச் சுடுதல்: இந்திய இணைக்கு வெள்ளி!
கலப்பு இரட்டையர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் சரப்ஜோத் சிங் – திவ்யா தடிகோல் இணை வெள்ளிப்பதக்கம் வென்றது!
Long Jump: இறுதிப்போட்டியில் முரளி ஸ்ரீசங்கர், ஜெஸ்வின் ஆல்ட்ரின்
ஆடவருக்கான நீளம் தாண்டுதலில் முரளி ஸ்ரீசங்கர் மற்றும் ஜெஸ்வின்ஆல்ட்ரின் இருவரும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். ஜெஸ்வின் ஆல்ட்ரின் மூன்றாவது முயற்சியில் 7.67 மீட்டர் தாண்டி இறுதிப்போட்டிக்குத் தகுதிப் பெற்றார்.
முரளி ஸ்ரீசங்கர் தனது முதல் முயற்சியிலேயே 7.97 மீட்டர் தாண்டி, நேரடி கட் ஆஃப்பான 7.90 மீட்டர் தூரத்தைத் தாண்டியதால் நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று அசத்தினார்!
Kurash: காலிறுதியில் பின்கி பல்ஹரா!
மகளிருக்கான (52 கிலோ பிரிவு) குராஷ் போட்டியின் ‘ரவுண்ட் 16’ சுற்றில் தென்கொரிய வீராங்கனையை 5-3 என்ற புள்ளிகள் பெற்று வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிப்பெற்றார் இந்தியாவின் பின்கி பல்ஹரா!
நான்காவது இடத்தில் இந்தியா!
ஆறாவது நாள் முடிவில் 8 தங்கப்பதக்கங்கள் உட்பட 33 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது இந்தியா!