சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்ட சிவராஜ்குமார்
கன்னடத் திரையுலகத்தில் மறைந்த நடிகர் ராஜ்குமார் குடும்பத்தினருக்கென தனி மரியாதை உள்ளது. அவர்கள் குடும்பத்தினர் திரையுலகத்தில் தலையிட்டால் மற்றவர்கள் அதற்கு எதிர்ப்பு கருத்துக்களைத் தெரிவிக்கத் தயங்குவார்கள். நடிகர் ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார் கன்னடத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவர். ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'ஜெயிலர்' படத்திலும் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். நேற்று பெங்களூருவில் தமிழ் நடிகர் சித்தார்த் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் கன்னட அமைப்பினர் வந்து தகராறு செய்து சித்தார்த்தை வெளியேற வைத்தனர். அதற்கு கன்னட நடிகரான பிரகாஷ்ராஜ் … Read more