ரூ.2000 நோட்டு மாற்ற இன்றே கடைசி…. வங்கிகளில் அலைமோதும் கூட்டம் – பொதுமக்கள் அவதி…

சென்னை : நாளை முதல் (அக்டோபர் 1) ரூ.2000 நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  ரூ.2000 நோட்டை வங்கிகளில் மாற்ற இன்றே கடைசி நாளாகும்.  அதனால் வங்கிகளில் கூட்டம் அலைமோதுகிறது. பொதுமக்கள் சிறுகசிறுக சேர்த்து வைத்த ரூ.2000 நோட்டுக்களை மாற்ற முடியாமல்  தவித்து வருகின்றனர். மத்தியஅரசு, கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பை ஏற்படுத்தி, மக்களியே அதிர்ச்சியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து 2026ம் ஆண்டு  நவம்பரில் புதிய ரூ.2,000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ரூ.2000 நோட்டுக்கள் கடந்த … Read more

பாடல் காட்சியுடன் தொடங்கும் விஜய் 68 படப்பிடிப்பு

நடிகர் விஜய் நடித்து முடித்துள்ள 'லியோ' படம் அக்., 19ல் ரிலீஸாகிறது. இதை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடிக்கவுள்ளார் விஜய். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என சில மாதங்களுக்கு முன்பே அறிவித்தனர். தற்போது இதன் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் அரவிந்த்சாமி, சினேகா, பிரியங்கா மோகன், பிரசாந்த், பிரபுதேவா ஆகியோர் இணைந்து நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் பூஜை நிகழ்ச்சி … Read more

Chandramukhi 2 Collection: சந்திரமுகி 2 இரண்டாம் நாள் வசூல்.. மகிழ்ச்சியில் ராகவா லாரன்ஸ்!

சென்னை: பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன் நடித்துள்ள சந்திரமுகி 2 திரைப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி முதல் பாகம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று, நன்றாக கல்லாக்கட்டியது. இந்த படத்தில் ஜோதிகா, பிரபு,நாசர், வடிவேலு,வினீத் என பலர் நடித்திருந்தனர். தற்போது சந்திரமுகி இரண்டாம் பாகம்

தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பதற்கு கண்டனம்: முழுஅடைப்பால் கர்நாடகம் முடங்கியது

பெங்களூரு: தென்மேற்கு பருவமழை பொய்த்துப்போகும் காலங்களில் தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் இடையே காவிரி நீரை பங்கிட்டுக் கொள்வதில் பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த 21-ந் தேதி, தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இதற்கு எதிராக கர்நாடகத்தில் போராட்டங்கள் வெடித்தன. குறிப்பாக மண்டியா மாவட்டத்தில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 18-ந் தேதி மண்டியாவில் முழு அடைப்பு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கடந்த 26-ந் … Read more

உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்: நியூசிலாந்து, வங்காளதேச அணிகள் வெற்றி.!

ஐதராபாத், ஐசிசி நடத்தும் 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிகள் இந்தியாவில் அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இதன் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோத உள்ளனர். இதற்கிடையில், தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, இன்று ஐதராபாத்தில் பாகிஸ்தான் -நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி பேட்டிங் செய்த அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 345 ரன்கள் … Read more

டி.வி. விவாத நிகழ்ச்சியில் அரசியல் விமர்சகர்கள் கைகலப்பு: சமூக வலைதளங்களில் வைரல்

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் உள்ள பிரபல டி.வி.சேனல் சார்பில் விவாத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி சார்பில் இம்ரான்கானின் வக்கீல் ஷெர் அப்சல் கான் மார்வாட், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் அப்னான் உல்லா கான் என முக்கிய கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி தொடங்கி நேரலையில் ஒளிபரப்பானது. அப்போது முன்னாள் பிரதமர் இம்ரான்கானை யூதர்களின் முகவர் என உல்லா கான் விமர்சித்தார். இதனால் அப்சல்கானுக்கும், … Read more

பதுளை தமிழ்மொழி மூல பாடசாலைகளின் மாணவர் பாராளுமன்றங்களின் பங்களிப்புடன் ‘பாராளுமன்ற அறிவகம்’ விசேட நிகழ்ச்சி

  பதுளை மாவட்டத்தில் 26 தமிழ்மொழி மூல பாடசாலைகளின் மாணவர் பாராளுமன்றங்களின் பங்களிப்புடன் பண்டாரவளையில் ‘பாராளுமன்ற அறிவகம்’ விசேட நிகழ்ச்சி பதுளை மாவட்டத்தில் உள்ள 26 தமிழ்மொழி மூலப் பாடசாலைகளின் மாணவர் பாராளுமன்றங்களைச் சேர்ந்த மாணவ மாணவியரின் பங்களிப்புடன் பண்டாரவளை தமிழ் மத்திய கல்லூரியில் ‘பாராளுமன்ற அறிவகம்’ நிகழ்ச்சித்திட்டத்தின் விசேட செயலமர்வு அண்மையில் நடைபெற்றது. இலங்கைப் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பொதுமக்கள் வெளித்தொடர்புப் பிரிவு, தேசிய ஜனநாயக நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த செயலமர்வில், எதிர்காலத்தின் … Read more

எடப்பாடியின் ‘மெகா’ கூட்டணி திட்டம்! – அலர்ட் ஆகிறதா திமுக?!

வெளியேறிய அதிமுக: தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக இருக்கும்போது `நாங்கள் தான் எதிர்க்கட்சி’ என்று சொல்லி பலமுறை அதிமுகவைச் சீண்டிக்கொண்டிருந்தது பாஜக. அதற்கு அந்தந்த சமயத்திலும் அதிமுக சார்பிலும் தக்க பதிலடி கொடுத்து வந்தார்கள். அதிமுக – தமிழக பாஜக-வுக்கிடையே நீண்ட நாள்களாக ஒரு பனிப்போர் நிலவிக்கொண்டேதான் இருந்தது. அதிலும் அண்மைக் காலங்களில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவின் மூத்த தலைவர்களை விமர்சனம் செய்தது அந்த கட்சி தொண்டர்களை ஆத்திரமடைய வைத்தது. இந்த சுழலில் சமீபத்தில் … Read more

பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் பால் விற்க தடை கோரி வழக்கு: பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் பால் மற்றும் பால் பொருட்களை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கத் தடை கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் நேற்று உத்தரவிட்டுள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் சமூக ஆர்வலர் அய்யா என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஆவின் நிறுவனம்உள்ளிட்ட பால் பொருட்களை விற்பனை செய்து வரும் நிறுவனங்கள் பால் மற்றும் பால் பொருட்களை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து விற்று … Read more