பாகிஸ்தானில் மசூதியில் குண்டு வெடித்து 55 பேர் பலி: 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

இஸ்லாமாபாத், சிறப்பு தொழுகை பாகிஸ்தானில் மிலாது நபி உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பலுசிஸ்தான் மாகாணம் மஸ்துங் நகரில் உள்ள ஒரு மசூதியில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதற்காக அங்கு ஏராளமானோர் கூடியிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த மசூதியில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. இதனால் அங்கிருந்தவர்கள் பயத்தில் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். எனினும் இந்த குண்டுவெடிப்பில் 52 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். 50-க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டது. இந்த குண்டுவெடிப்பு … Read more

தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (செப். 30) ஒரிரு இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அக். 1 முதல் 5-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48மணி நேரத்தில் வானம் … Read more

வாரணாசி கியான்வாபி மசூதியில் ஆய்வுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

வாரணாசி: கியான்வாபி மசூதியில், தொல்பொருள் ஆய்வுத்துறை நடத்தும் ஆய்வை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வாரணாசி நீதிமன்றம் நேற்று நிராகரித்தது. உத்தர பிரதேசம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகேயுள்ள கியான்வாபி மசூதி, கோயில் வளாகத்தின் மீது கட்டப்பட்டுள்ளது. அங்கு அறிவியல்பூர்வ ஆய்வு நடத்தவேண்டும் என்று கோரி வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து அங்கு தொல்பொருள் ஆய்வுத்துறை ஆய்வு மேற்கொள்ள வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து கியான்வாபி மசூதி சார்பில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் … Read more

தமிழகத்துக்கு 3,000 கன அடி நீர் திறக்க காவிரி ஆணையம் உத்தரவு | Cauvery Commission orders to release 3,000 cubic feet of water to Tamil Nadu

அடுத்த, 15 நாட்களுக்கு வினாடிக்கு, 3,000 கன அடி வீதம், காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் நேற்று புதுடில்லியில் நடந்தது. ஆணையத்தின் தலைவர் ஹல்தர் தலைமையில், 25வது முறையாக கூடிய இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, கேரள அரசுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். மறுப்பு தமிழக அரசின் சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலர் மணிவாசன், சென்னையிலிருந்தபடியே … Read more

பகவந்த் கேசரி படத்தின் படப்பிடிப்பு நிறைவு

நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் 108வது படமான 'பகவந்த் கேசரி' படத்தை அனில் ரவிபுடி இயக்கியுள்ளார். காஜல் அகர்வால், அர்ஜுன் ராம்பால், ஸ்ரீ லீலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஷைன் ஸ்கிரீன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இத்திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ம் தேதி அன்று வெளியாகிறது. இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்ததாக சிறப்பு வீடியோ ஒன்றின் மூலம் அறிவித்துள்ளனர். மேலும், இந்த வீடியோவில் கடந்த 8 மாதங்களில் படப்பிடிப்பு 24 இடங்களில், … Read more

பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் பாகிஸ்தானில் 55 பேர் உடல் சிதறி பலி| 55 people were killed in a terrorist suicide attack in Pakistan

கராச்சி, பாகிஸ்தானில் மிலாது நபியை ஒட்டி ஏற்பாடு செய்திருந்த பேரணிக்கு தயாராக இருந்த கும்பலில், பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில், 55 பேர் உயிரிழந்தனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் மஸ்டங் மாவட்டம் அமைந்துள்ளது. சிறப்பு பேரணி இங்கு அல் – பலா சாலையில் உள்ள மசூதி அருகே, மிலாது நபி பண்டிகையை ஒட்டி நேற்று சிறப்பு பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக, மஸ்டங் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குழந்தைகள், … Read more

Silk Smitha – திமிரில் அப்படி செய்யவில்லை.. சிவாஜியிடம் மன்னிப்பு கேட்ட சில்க் ஸ்மிதா.. என்ன நடந்தது தெரியுமா?

சென்னை: Silk Smitha (சில்க் ஸ்மிதா) நடிகை சில்க் ஸ்மிதா சிவாஜி கணேசனிடம் மன்னிப்பு கேட்ட சம்பவம் தெரியவந்திருக்கிறது. தமிழ் சினிமா வரலாற்றில் சில்க் ஸ்மிதாவின் பெயரை எந்த காலத்திலும் மறக்க முடியாது. ஆந்திராவில் விஜயலட்சுமியாக பிறந்தவர் வினு சக்கரவர்த்தியின் வண்டிச்சக்கரம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது கவர்ச்சியால் அனைவரையும் கிறங்கடித்து சில்க்

காவிரி விவகாரத்தில் இனியாவது கர்நாடகத்திற்கு எதிராக உத்தரவுகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்: பசவராஜ் பொம்மை பேட்டி

பெங்களூரு: முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- காவிரி விவகாரத்தில் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் இடையே ஒருங்கிணைப்பு இல்லை. அதேபோல் போலீஸ் மந்திரி மற்றும் உயர் அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லை என்பதும் நிரூபணம் ஆகியுள்ளது. கொள்ளை நடந்த பிறகு வீட்டு கதவை மூடுவது போல் காவிரி விவகாரத்தில் இப்போது சட்ட போராட்டம் நடத்துவதாக இந்த அரசு சொல்கிறது. சட்ட நிபுணர்களுடன் பேசும் பணியை முன்பே செய்திருக்க வேண்டும். … Read more

ஆசிய விளையாட்டு – பதக்கப்பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடம் தெரியுமா ?…

ஹாங்சோவ், 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12500 வீரர் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். ஆசிய விளையாட்டு போட்டியில் 7 வது நாளான இன்று இந்தியா பதக்கப்பட்டியலில் 4 வது இடத்தில் உள்ளது. இந்தியா தற்போது வரை 8 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலம் உட்பட மொத்தம் 33 பதக்கங்களை பெற்று 4 வது இடத்தில் உள்ளது. தினத்தந்தி Related … Read more

கனடாவுடனான மோதலுக்கு மத்தியில் அமெரிக்க வெளியுறவு மந்திரியுடன் ஜெய்சங்கர் சந்திப்பு

வாஷிங்டன், இதனிடையே அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் நேற்றுமுன்தினம் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளின்கனை சந்தித்தார். இரு தரப்பு உறவுகள் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் இந்த இருதரப்பு சந்திப்பின் போதும், அதன் பிறகு கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தபோதும் இருவரும் இந்தியா-கனடா இடையேயான மோதல் குறித்து மவுனம் காத்தனர். இரு நாட்டு மந்திரிகள் சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் … Read more