தெற்கு சூடானின் உள்நாட்டு பாதுகாப்புக்கு ரஷியா உதவும்: அதிபர் புதின் உறுதி

ஜூபா, ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடான் கடந்த 2011-ம் ஆண்டு சூடானில் இருந்து சுதந்திரம் பெற்று தனிநாடாக பிரிந்தது. அதுமுதல் அங்கு அதிபர் சல்வா கீர் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதன்முறையாக அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில் அதிபர் சல்வா கீர் ரஷியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தெற்கு சூடானின் உள்நாட்டு அரசியல் சூழ்நிலையை கையாளுதல் மற்றும் … Read more

சிவகாசி மாநகராட்சி கூட்டம் | துணை மேயர் உட்பட பெரும்பான்மை கவுன்சிலர்கள் புறக்கணிப்பு

சிவகாசி: சிவகாசி மாநகராட்சியில் நடந்த கவுன்சில் கூட்டத்தை துணை மேயர், 3 மண்டல தலைவர்கள் உட்பட பெரும்பான்மை கவுன்சிலர்கள் புறக்கணித்தனர். சிவகாசி மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் திமுக 24, கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 6, மதிமுக 1, விசிக 1 , என 32 இடங்களிலும், அதிமுக 11, பாஜக 1, சுயேச்சை 4 இடங்களிலும் வெற்றி பெற்றது. அதிமுக கவுன்சிலர்கள் 9 பேர் திமுகவில் இணைந்தனர். இதையடுத்து திமுகவைச் சேர்ந்த சங்கீதா மேயராகவும், விக்னேஷ்பிரியா … Read more

5 மாநில தேர்தலில் அதிக எம்.பி.க்களை களமிறக்க பாஜக முடிவு: முதல்வர் வேட்பாளர்களை முன்னிறுத்த வாய்ப்பில்லை

புதுடெல்லி: அடுத்த வருடம் வரவிருக்கும் மக்களவை தேர்தலுக்கு முன்பாக ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான அரையிறுதிப் போட்டியாகக் கருதப்படும் இத்தேர்தலின் வெற்றி மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. 5 மாநிலங்களில் ம.பி.யில் மட்டுமே பாஜக ஆட்சியில் உள்ளது. மிசோரமில் ஆளும் மிசோரம் தேசிய முன்னணியின் கூட்டணிக் கட்சியாக உள்ளது. இதனால் நான்கு மாநிலங்களிலும் வெற்றிபெற்று ஆட்சிஅமைக்க பாஜக பல புதிய திட்டங்களை வகுத்து வருகிறது. இதில், … Read more

தொல்லியல் ஆய்வுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி| Dismissal of plea seeking ban on archaeological survey

வாரணாசி ஞானவாபி வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வுக்கு தடை கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உ.பி.,யின் வாரணாசியில், காசி விஸ்வநாதர் கோவிலை ஒட்டி, ஞானவாபி வளாகம் அமைந்து உள்ளது. இங்கு தொல்லியல் துறை ஆய்வு நடத்தக் கோரி, மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு, நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதை அலகாபாத் உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தொல்லியல் துறை ஆய்வுக்கு தடை விதிக்க … Read more

பொங்கலுக்கு வெளியாகும் ‛அரண்மனை 4'

சுந்தர். சி இயக்கத்தில் இதற்கு முன்பு வெளிவந்த அரண்மனை 1, 2, 3 ஆகிய பாகங்களை தொடர்ந்து தற்போது அரண்மனை படத்தின் 4ம் பாகத்தை உருவாக்கி வருகிறார் சுந்தர். சி. இதில சுந்தர். சி கதாநாயகனாக நடிக்கிறார். நடிகைகள் தமன்னா, ராஷி கண்ணா என இருவரும் கதாநாயகியாக நடிக்கின்றனர். இவர்களுடன் யோகி பாபு, வி.டி.வி.கணேஷ், டெல்லி கணேஷ், ஜே பி, விச்சு, கேஜிஎப் ராம், சேசு, சந்தோஷ் பிரதாப், தீரஜ் விஷ்ணு ரத்தினம், நமோ நாராயணன், மொட்டை … Read more

Vijay Antony: மீண்டு(ம்) வந்த விஜய் ஆண்டனி.. ஹிட்லர் படத்தின் பர்ஸ்ட் லுக் இதோ!

சென்னை: இசையமைப்பாளராக தன்னுடைய கேரியரை தமிழ் சினிமாவில் துவங்கியவர் விஜய் ஆண்டனி. தொடர்ந்து நடிகர், தயாரிப்பாளர், பாடகர், இயக்குநர் என பன்முகம் காட்டி வருகிறார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் பிச்சைக்காரன் 2 படம் வெளியாகி சிறப்பாக அமைந்தது. அவரது சொந்த வாழ்க்கையில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள சோகம் அவரை புரட்டிப் போட்டுள்ளது. என்ற போதிலும் தற்போது

காவிரி ஆணையம், சுப்ரீம் கோர்ட்டில் இன்று கர்நாடகம் புதிய மனு தாக்கல்; முதல்-மந்திரி சித்தராமையா அறிவிப்பு

பெங்களூரு: காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு மேலும் 18 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீரை திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. தங்களிடம் நீர் இல்லை என்று கர்நாடகம் கூறியுள்ளது. இந்த நிலையில் காவிரி நீர் விவகாரத்தில் அடுத்தக்கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் சட்ட நிபுணர்கள் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதிகள், சட்ட … Read more

லைவ்: ஆசிய விளையாட்டு – தடகள போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 8 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 33 பதக்கங்கள் வென்றுள்ளது. இதன் மூலம் பதக்க பட்டியலில் இந்தியா 4ம் இடத்தில் உள்ளது. தடகள போட்டியில் குண்டு எறிதல் போட்டியில் இந்தியா வெண்கலம் வென்றுள்ளது. Live Updates 2023-09-29 01:02:31 29 Sep 2023 2:31 PM GMT 1⃣st🏅 in #Athletics for 🇮🇳 at #AsianGames2022 Bronze🥉 triumph for Kiran Baliyan & our … Read more

பாகிஸ்தானில் பயங்கரம்; தற்கொலைப்படை தாக்குதலில் 55 பேர் பலி

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் மஸ்தூங் மாவட்டத்தில் உள்ள மசூதியின் அருகே நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை கொண்டாட பொதுமக்கள் கூடியிருந்தனர். இந்நிலையில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. முதற்கட்ட தகவலின்படி இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 55 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும், பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். எனவே உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த குண்டு வெடிப்பிற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. … Read more