அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் வகையில் செயல்படும் சார்பதிவாளர்கள் மீது கடும் நடவடிக்கை – அமைச்சர் எச்சரிக்கை
மதுரை: ‘‘அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் சார்பதிவாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி எச்சரிக்கை தெரிவித்தார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில், மதுரை பதிவு மாவட்டத்திற்குட்பட்ட சார்பதிவாளர்களின் பணி ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது: மதுரை வருவாய் மாவட்டத்திற்குட்பட்டு மதுரை வடக்கு, மதுரை தெற்கு என இரு பதிவு மாவட்டங்கள் உள்ளன. … Read more