வாச்சாத்தி சம்பவம்: 17 அரசு அதிகாரிகளின் சிறை தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்…

சென்னை: வாச்சாத்தியில் 18 பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அரசு அதிகாரிகளின்  17 பேருக்கு சிறை தண்டனையை சென்னை உயர்நீதி மன்றம்  உறுதி செய்துள்ளது. அவர்களின் மேல்முறையீடு மனுக்களை தள்ளுபடி செய்தது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நஷ்ட ஈடு வழக்கவும் உத்தரவிட்டுள்ளது. வாச்சாத்தி மலைகிராம மக்கள் மீதான வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்த வழக்குகளில்  சென்னை உயர் நீதிமன்றம், இன்று (செப்.29) விசாரணை நீதிமன்ற தீர்ப்பை உறுதிசெய்து … Read more

அரசு பள்ளி.. ஹெச்.எம்.மின் கையை கடித்த செல்வி டீச்சர்..அழுதுகொண்டே நாங்குநேரி போலீசுக்கு ஓடிய கொடுமை

நெல்லை: தலைமை ஆசிரியை என்றும் பாராமல் சரமாரியாக தாக்கியிருக்கிறார் செல்வி டீச்சர்.. இதுதொடர்பான வீடியோ ஒன்று இணையத்திலும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள தளபதி சமுத்திரம் அரசு மேல் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.. இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கண்ணநல்லூர் கிராமத்தை சேர்ந்த ஸ்டெல்லா Source Link

ஓட்டுநர் உரிமம் சஸ்பெண்ட் விவகாரம் ஓ.பி.எஸ்., அணி செயலர் கோரிக்கை| Driving license suspended issue OPS, team secretary request

புதுச்சேரி: போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 25 ஆயிரம் பேருக்கு ஒருமுறை மன்னிப்பு வழங்க வேண்டும் என முதல்வருக்கு, ஓ.பி.எஸ்., அணி செயலர் ஓம்சக்தி சேகர் கோரிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை: கடந்த ஆண்டு ஹெல்மெட் கட்டாயம் என்றபோது கடும் எதிர்ப்பு கிளம்பியது. அப்போது ஹெல்மெட் கட்டாயம் என்பதை வற்புறுத்த வேண்டாம் என அரசு கூறியது. இந்நிலையில் ஹெல்மெட் அணியாமலும் பல்வேறு சாலை விதிமுறைகளில் ஈடுபட்ட 25 ஆயிரம் பேரின் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்வது என்பது … Read more

பெங்களூருவில் நடிகர் சித்தார்த்துக்கு எதிர்ப்பு: பாதியில் வெளியேறினார்

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட அம்மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சமீபத்தில் பெங்களூருவில் ‛பந்த்' அறிவிக்கப்பட்ட நிலையில், நாளை (செப்.,29) மாநிலம் முழுவதும் பந்த்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நடிகர் சித்தார்த் நடித்து இன்று வெளியான சித்தா படம், கன்னடத்தில் ‛சிக்கு' என்ற பெயரில் வெளியானது. இதற்காக பெங்களூருவில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அங்கு வந்த கன்னட ஆதாரவாளர்கள் சித்தார்த்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதன், காரணமாக நிகழ்ச்சியில் இருந்து நடிகர் … Read more

Pandian stores serial: என் வாழ்க்கையில் கதிரை பார்க்கவே கூடாது.. கோபத்தின் உச்சியில் மீனா!

சென்னை: விஜய் டிவியின் நம்பர் ஒன் தொடர்களில் ஒன்றாக தொடர்ந்து மாஸ் காட்டி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்தத் தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாக கூறப்படும் நிலையில், அடுத்தடுத்த பரபரப்பான காட்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. தொடரின் அடுத்தடுத்த ப்ரமோக்கள், எபிசோட்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து டிஆர்பியிலும் தொடர் சிறப்பான இடத்தை பிடித்து வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ்

பிஎம்டபிள்யூ iX1 எலக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

இந்தியாவில் பிஎம்டபிள்யூ நிறுவனம், 440 கிமீ ரேஞ்ச் வழங்குகின்ற iX1 எலக்ட்ரிக் எஸ்யூவி காரை ரூபாய் 69.90 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிஎம்டபிள்யூ நிறுவனம் ஏற்கனவே இந்திய சந்தையில் மூன்று மின்சார பேட்டரி வாகனங்கள் விற்பனை செய்யும் நிலையில் இது நான்காவது மாடலாகும். BMW iX1 Electric SUV iX1 xDrive30 வேரியண்டில் 64.7kWh பேட்டரி பொருத்தப்பட்டு இரட்டை மோட்டார் அமைப்பின் மூலம் அதிகபட்சமாக 313bhp பவர் மற்றும் 494Nm டார்க் வரை வழங்கும் வகையில் … Read more

ஐ.எம்.எப் இன் இரண்டாவது தவணைக் கடனை பெற்றுக்கொள்வது தொடர்பில் சாதகமான பேச்சு – பதில் நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க

ஐ.எம்.எப் இன் இரண்டாவது தவணைக் கடனை பெற்றுக்கொள்வது தொடர்பில் சாதகமான பேச்சு – பதில் நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணைக் கடனை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் சாதகமான முறையில் இடம்பெற்று வருவதாக தெரிவித்த பதில் நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க, அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளதாகவும் கூறினார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜேர்மன் விஜயம் நிறைவடைந்தவுடன், இரண்டாவது தவணைக் கடனை பெற்றுக்கொள்வதற்கான செயற்குழு … Read more

TMB: ஓட்டுநர் கணக்கில் 9000 கோடி; ஐ.டி ரெய்டு… சர்ச்சைகளுக்கிடையே சி.இ.ஓ ராஜினாமா – பின்னணி!

தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு ’நாடார் வங்கி’ என்ற பெயருடன் கடந்த 1929-ம் ஆண்டு தொடங்கப்பட்ட  தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி,  தற்போது இந்தியா முழுவதும் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 533 கிளைகள் மற்றும் 12 மண்டல அலுவலகங்களுடன் இயங்கிவருகிறது. பங்குதாரர்களால் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்குப் புதிதல்ல. ஆனால்,  கடந்த ஜூன் 27-ம் தேதி, வங்கியின் தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் வங்கியின் வரலாற்றில் முதன்முறையாக வருமான வரித்துறையினர் சோதனை … Read more

எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவு: கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள் இரங்கல்

சென்னை: வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு தமிழகம், தெலங்கானா ஆளுநர்கள், முதல்வர் ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி: பசுமைப்புரட்சியின் தந்தையும், நவீன பாரதத்தைக் கட்டமைத்தவருமான டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். அவர் எப்போதும் நம் இதயங்களிலும், மனதிலும் வாழ்வார். துயர்மிகு இந்நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடன் இருக்கும். முதல்வர் மு.க.ஸ்டாலின்: பசிப்பிணி ஒழிப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பு என்றஇரு குறிக்கோள்களுக்காக அரும்பணியாற்றியவர் … Read more

எம்.பி.க்கள் ரமேஷ் பிதூரி, டேனிஸ் அலி மீதான புகார்கள் உரிமைமீறல் குழுவுக்கு பரிந்துரை: மக்களவை சபாநாயகர் நடவடிக்கை

புதுடெல்லி: பாஜக எம்.பி.க்கள் ரமேஷ் பிதூரி, பகுஜன் சமாஜ் எம்.பி. டேனிஸ் அலி ஆகியோர் மீதான புகார்களை உரிமை மீறல் குழுவுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பரிந்துரைத்துள்ளார். நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் கடந்த 21-ம் தேதி நடைபெற்ற போது மக்களவையில் சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றி குறித்த விவாதம் நடைபெற்றது. அப்போது குறுக்கிட்ட பகுஜன் சமாஜ் எம்.பி டேனிஸ் அலியை தீவிரவாதி என்று கூறி தகாத வார்த்தைகளால், பாஜக எம்.பி ரமேஷ் பிதூரி திட்டினார். இதற்கு … Read more