அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளின்கனுடன் ஜெய்சங்கர் சந்திப்பு: கனடா பிரச்சினையில் மவுனம்

வாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கனை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சந்தித்த நிலையில் கனடா பிரச்சினை குறித்து இருவரும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மவுனம் காத்தது கவனம் பெற்றுள்ளது. காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் நிஜார் கொலையால் இந்தியா – கனடா இடையே மோதல் வலுத்துள்ள நிலையில் அமெரிக்கா சென்ற வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கனை சந்தித்தார். தனது அண்டை நாடான கனடாவும், தெற்காசியப் பிராந்தியத்தில் முக்கியமான நாடாக விளங்கும், அதுவும் … Read more

கோடம்பாக்கம் முதல் போரூர் வரை சாலை பழுது பார்க்கும் பணிகள் விரைவில் முடியும்! மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவிப்பு

சென்னை:  கோடம்பாக்கம் முதல் போரூர் வரை சாலை பழுதுபார்க்கும் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் பணிகளால்  கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.  அத்துடன் சாலை பணிகள், மழைநீர் வடிகால் பணிகள் என எந்தவொரு பணிகளும் முழுமையாக முடிவடையாததால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.  சமீப காலமாக அவ்வப்போது பெய்து வரும் மழையால், சாலைகளில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. … Read more

ஹாலிவுட்டுக்கு செல்லும் யஷ்

கன்னட சினிமாவில் இரண்டாம் வரிசை நடிகராக இருந்தவர் யஷ். 'கேஜிஎப்' என்ற ஒரே படத்தின் மூலம் பான் இந்தியா நட்சத்திரம் ஆனார். இந்த படத்தின் இரண்டாம் பாகமும் பெரிய வெற்றியை பெற்றது. அடுத்து அவர் மலையாள இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அவர் ஹாலிவுட் இயக்குனர் மற்றும் நடிகர் ஜே.ஜே.பெர்ரியை லண்டனில் சந்தித்து பேசி உள்ளார். அதோடு அவரது பயிற்சி கூடத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுக்கும் வீடியோவையும் … Read more

Chandramukhi 2 Box Office-சந்திரமுகி 2..முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?..இதோ முழு விவரம்

சென்னை: Chandramukhi 2 Box Office (சந்திரமுகி 2 பாக்ஸ் ஆபிஸ்) சந்திரமுகி 2 படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. ரஜினி நடித்த சந்திரமுகி படம் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியானது. பாபா படத்தின் தோல்விக்கு பிறகு ரஜினிகாந்த நடித்திருந்த அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. அதில் ரஜினியுடன் ஜோதிகா,

2024 ஆம் ஆண்டு உலகளாவிய சவால்களுக்கு முகம்கொடுக்க கூடிய திட்டமிடலுக்கான வலுவான சர்வதேச கலந்துரையாடல் அவசியம்

2024 ஆம் ஆண்டு உலகளாவிய சவால்களுக்கு முகம்கொடுக்க கூடிய திட்டமிடலுக்கான வலுவான சர்வதேச கலந்துரையாடல் அவசியம் “பேர்லின் குளோபல்” முதல் நாள் நிகழ்வின் அரச தலைவர்களுக்கான கலந்துரையாடலில் ஜனாதிபதி தெரிவிப்பு. பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகள் இலங்கைக்கு வழங்கியிருந்த ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவிப்பு. 2024 ஆம் ஆண்டு உலகளாவிய சவால்களுக்கு ஈடுகொடுக்கக் கூடிய வலுவான சர்வதேச திட்டமிடலுக்காக மேற்குலக நாடுகளும், ஐக்கிய அமெரிக்காவும், ஐரோப்பிய சங்கமும் சீனாவுடன் தீர்மானமிக்க கலந்துரையாடல்களை மேற்கொள்ள … Read more

டாஸ்மாக்கில் மது வாங்கிய மீன்வியாபாரி; கலால் போலீஸ் தாக்கியதில் உயிரிழப்பு? – கொதித்த உறவினர்கள்

பட்டுக்கோட்டையில் டாஸ்மாக்கில் மது வாங்கிச் சென்ற மீன் வியாபாரி ஒருவரை, விற்பனைக்கு வாங்கி சென்றதாக கூறி கலால் போலீஸ் ஏட்டு தாக்கியதில் மீன் வியாபாரி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இறந்தவரின் உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த வீரையன் பட்டுக்கோட்டை அருகே உள்ள தாமரங்கோட்டை உம்பளகொள்ளை பகுதியை சேர்ந்தவர் வீரையன் (52). மீன் வியாபாரம் செய்து வந்தார். நேற்று வியாபாரத்தை முடித்த பிறகு டாஸ்மாக் கடைக்கு சென்றவர், தன்னுடன் மீன் … Read more

தமிழகத்தில் 10 சதவீத ரயில் நிலையங்களில்கூட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவில்லை: தெற்கு ரயில்வேக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

சென்னை: பல்வேறு அசம்பாவிதங்கள் அவ்வப்போது நடந்துவரும் நிலையில், தமிழகத்தில் உள்ள 10 சதவீத ரயில் நிலையங்களில்கூட இன்னும் கண்காணி்ப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை என தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 2016-ம் ஆண்டு மென்பொறியாளர் சுவாதி படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து ரயில் நிலையங்கள் உள்பட மாநிலம் முழுவதும் உள்ளமுக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது … Read more

ஊழியரின் கவனக்குறைவால் உ.பி.யில் ரயில் தடம்புரண்டு பிளாட்பாரத்தில் ஏறியது: உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு

மதுரா: உ.பி.யில் ஊழியரின் கவனக்குறைவால் மின்சார ரயில் நகர்ந்து பிளாட்பாரத்தில் ஏறியது. உத்தர பிரதேசத்தில் உள்ள மதுரா ரயில் நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு மின்சார ரயில் வந்து நின்றது. பயணிகள் இறங்கியதும், அந்த ரயிலை இயக்கிய டிரைவரும் பணியை முடித்து விட்டு ரயில் இன்ஜினில் இருந்து இறங்கினார். அதன் சாவியை எடுத்து வருவதற்காக அந்த ரயிலில் ஏறிய ஊழியர் சச்சின் தனது தோளில் இருந்து இறக்கிய பையை, ரயிலை இயக்கும் ‘த்ராட்டில்’ அருகே வைத்து விட்டு, … Read more

Ratham: "நாங்கள் எப்போதும் உங்களுடன் இருப்போம் விஜய் ஆண்டனி சார்!" – இயக்குநர் சி.எஸ்.அமுதன்

சி.எஸ். அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா ஸ்வேதா, நிழல்கள் ரவி ஆகியோர் நடித்து அக்டோபர் 6-ம் தேதி வெளியாகவிருக்கும் திரைப்படம் `ரத்தம்’. இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் விஜய் ஆண்டனி, அவரது இளையமகள் லாரா, C.S அமுதன், மகிமா நம்பியார் மற்றும் படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர். ‘ரத்தம்’ பத்திரிக்கையாளர் சந்திப்பு இவ்விழாவில் பேசிய விஜய் ஆண்டனி, “அமுதன் என் நண்பன். அவருடைய அப்பா எனக்கு மியூசிக் … Read more

496 ஆம்  நாளாக தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 496 ஆம் நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்கப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. அதன்படி சென்னையில் தொடர்ந்து 496 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல், விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.