ஹாரி பாட்டர் நடிகர் மைக்கேல் கேம்பன் காலமானார்

தி ஓமன், தி லாஸ்ட் செப்டம்பர், சர்ச்சில்ஸ் சீக்ரெட் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட ஹாலிவுட் படங்களில் நடித்தவர் மைக்கேல் கேம்பன். 2004ல் வெளியான ஹாரிபாட்டர் படத்தின் மூலம் பிரபலமானார். அப்படத்தில் புரொபசர் டம்பிள்டோராக நடித்து பலரது பாராட்டை பெற்றார். ஐரிஸ் நடிகரான இவர் 8 பாகங்களைக் கொண்ட ஹாரிபாட்டர் படத்தில் முதல் 6 பாகங்களில் நடித்திருந்தார். நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருந்த மைக்கேல் கேம்பன், தனது 82வது வயதில் இன்று (செப்.,28) காலமானார்.

HBD Khushbu – தமிழ் சினிமாவை ஆட்சி செய்த குஷ்பூ.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சென்னை: Khushbu Birthday (குஷ்பூ பிறந்தநாள்) நடிகை குஷ்பூ இன்று தனது 54ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். ரஜினிகாந்த், பிரபு நடித்த தர்மத்தின் தலைவன் படம் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் குஷ்பூ. முதல் படத்திலேயே தனது அழகாலும், நடிப்பாலும் ரசிகர்களை ஈர்த்தார். பிறகு வருஷம் 16 படத்தில் நடித்தார். அந்தப் படமும் மெகா ஹிட்டானது. அதனையடுத்து

மத்திய இணை மந்திரி: எல்.முருகன் இன்று உஸ்பெகிஸ்தான் பயணம்

சென்னை, மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மற்றும் மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் அரசு முறை பயணமாக இன்று (வெள்ளிக்கிழமை) உஸ்பெகிஸ்தான் செல்கிறார். அந்த நாட்டின் தலைநகரான தாஷ்கண்டில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் அவர் பங்கேற்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறார். தினத்தந்தி Related Tags : எல்.முருகன்  உஸ்பெகிஸ்தான்  L. Murugan  Uzbekistan 

உலகக்கோப்பை அணி தேர்வு விவகாரம்: தமிம் இக்பால் மீது ஷகிப் அல்-ஹசன் சாடல்

டாக்கா, உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வங்காளதேச அணியில் தொடக்க ஆட்டக்காரரும், முன்னாள் கேப்டனுமான தமிம் இக்பால் திடீரென நீக்கப்பட்டார். அவ்வப்போது முதுகுவலியால் அவதிப்பட்ட அவருக்கு உடல் தகுதி பிரச்சினையால் இடம் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது. இதற்கிடையே, தமிம் இக்பால் வங்காளதேச கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக விமர்சித்தார். ‘முதுகு வலி இருப்பது உண்மை தான். ஆனால் உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக முழு உடல்தகுதியை எட்டிவிடுவேன் என்று என்னை தொடர்பு கொண்டு பேசிய வங்காளதேச கிரிக்கெட் வாரிய நிர்வாகியிடம் … Read more

காணாமல் போன பூமியின் 8-வது கண்டம் 'ஜிலாண்டியா'… புவியியலாளர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்!

வெல்லிங்டன், தண்ணீரால் சூழப்பட்ட நமது பூமியின் நிலப்பரப்பு, மொத்தம் 7 கண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 8-வதாக ஒரு கண்டம் பூமியில் இருந்ததாகவும், ‘கடல்கோள்’ எனப்படும் ஒரு பேரழிவு காரணமாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அந்த 8-வது கண்டம் தண்ணீரில் மூழ்கிவிட்டதாகவும் நீண்ட காலமாக புவியியல் ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் 375 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் காணாமால் போன 8-வது கண்டம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக கடந்த 2017-ம் ஆண்டு விஞ்ஞானிகள் அறிவித்திருந்தனர். அந்த 8-வது கண்டத்தின் … Read more

மணிப்பூர்: காவல்துறை அலுவலம் சூறை; நள்ளிரவில் முதல்வர் வீட்டை தாக்க முயற்சி, துப்பாக்கிச்சூடு!

கடந்த மே மாதம் பற்றிக்கொண்ட மணிப்பூர் கலவரம், இன்னும் ஓய்ந்தபாடில்லை. ராணுவத்தினரை கொண்டு வந்து கலவரத்தை அடக்க முயன்றாலும் ஆங்காங்கே வன்முறைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. கடந்த ஜூலை மாதம் காணாமல் போன இரண்டு மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட செய்தி இரண்டு நாள்களுக்கு முன்பு வெளியானது. இதனால் இரண்டு நாள்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதன் கிழமை மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் தடியடி நடத்தப்பட்டது. மாணவர்கள் நடத்திய பேரணியில் துணை ராணுவ படையினர் நடத்திய தாக்குதலில் … Read more

எம்.எஸ்.சுவாமிநாதன் பயின்ற கும்பகோணம் பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்கள் அஞ்சலி

கும்பகோணம்: வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானதையொட்டி, கும்பகோணத்தில் அவர் படித்த பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்கள் அவரது உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தினர். கும்பகோணத்தை பூர்விகமாகக் கொண்டவர் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் (98). இவர் 1935-ம் ஆண்டு முதல் 1938-ம் ஆண்டு வரை 6-ம், 7-ம், 8-ம் வகுப்புகளை நேட்டிவ் மேல்நிலைப் பள்ளியிலும், 1938-ம் ஆண்டு முதல் 1940-ம் ஆண்டு வரை 9-ம் மற்றும் 10-ம் வகுப்பைச் சிறிய மலர் மேல்நிலைப் பள்ளியிலும், பின்னர் கல்லூரி படிப்பை அரசு … Read more

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கு மத்திய சட்ட ஆணையம் ஆதரவு

புதுடெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான அறிக்கையை சட்ட ஆணையம் விரைவில் மத்திய அரசிடம் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற மக்களவை, அனைத்து சட்டப்பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் நேரம் மற்றும் தேர்தல் செலவை குறைக்க முடியும் என மத்திய அரசு கருதுகிறது. இந்நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி பி.எஸ்.சவுகான் தலைமையிலான 21-வது சட்ட ஆணையம் ஒரு வரைவு அறிக்கையை தாக்கல் … Read more

லியோ ஆடியோ விழா ரத்து- ஆதங்கத்தில் விஜய் ரசிகர்கள் வெளியிட்ட போஸ்டர்!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படம் அக்டோபர் 19ம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இம்மாதம் 30ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுவதாக இருந்தது. அது குறித்த டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் திடீரென்று லியோ படத்தை தயாரித்து வரும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார், லியோ படத்தின் இசை விழா ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இதற்கு சமீபத்தில் ஏ. ஆர். ரகுமானின் … Read more

Vijay: லியோ படத்தில் இணைந்த கமல்ஹாசன்.. ரசித்து பார்த்த விஜய்!

சென்னை: நடிகர் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன், பிரியா ஆனந்த், அனுராக் காஷ்யப் என முன்னணி நடிகர்கள் இணைந்துள்ள படம் லியோ. இந்த ஆண்டின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வெளியாகும் படங்களில் லியோவும் ஒன்று. அடுத்த மாதம் 19ம் தேதி இந்தப் படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் அடுத்தடுத்த கிளிம்ப்ஸ்