சத்தீஸ்கரில் மின்னல் தாக்கி 3 பெண்கள் பலி

ராய்ப்பூர், சத்தீஷ்காரின் பலோட் மாவட்டத்தில் உள்ள கிஸ்னா கிராமத்தில் மூன்று பெண்கள் வயல் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது மழை பெய்யத் தொடங்கியதை அடுத்து மூன்று பெண்களும் அங்கிருந்த மரத்தடியில் ஒதுங்கி நின்றனர். அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் மூன்று பெண்களும் உடல் கருகினர். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர்களை உள்ளூர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்கள் இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறி விட்டனர். உயிரிழந்தவர்கள் சமேலி நிஷாத், அவரது மருமகள் கமின் நிஷாத் மற்றும் பிசாண்டின் … Read more

ஒருநாள் உலகக் கோப்பையை தென்ஆப்பிரிக்க அணியால் வெல்ல முடியும் – ரபாடா நம்பிக்கை

திருவனந்தபுரம், 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் 10 நகரங்களில் அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை நடக்கிறது. இந்த சூழலில் நாளை ஆப்கானிஸ்தான் அணியுடன் உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி விளையாடுகிறது. சமீபத்தில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடரை வென்ற புதுதெம்புடன் தென் ஆப்பிரிக்கா அணி இந்த உலகக்கோப்பையை எதிர்கொள்கிறது. இந்நிலையில் ஒருநாள் உலகக் கோப்பையை தென்ஆப்பிரிக்க அணியால் வெல்ல முடியும் என்று அந்த அணியின் … Read more

அமெரிக்க வெளியுறவு மந்திரியுடன் ஜெய்சங்கர் சந்திப்பு; கனடா விவகாரம் பற்றி ஆலோசனையா?

வாஷிங்டன், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த வாரம் ஐ.நா. பொது சபையின் கூட்டத்தொடர் நடந்தது. இதில், மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார். இந்நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் அந்நாட்டு வெளியுறவு மந்திரி அந்தோணி பிளிங்கனை, மத்திய மந்திரி ஜெய்சங்கர் இன்று நேரில் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பில் கனடாவில் இந்த ஆண்டு ஜூனில் காலிஸ்தானிய பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பற்றி ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது. எனினும், அதுபற்றிய … Read more

புகழஞ்சலி – எம்.எஸ்.சுவாமிநாதன் | “விவசாய வளர்ச்சிக்கு புதிய பாதையை வித்திட்டவர்” – ஜி.கே.வாசன்

சென்னை: வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் இழப்பு விவசாய பெருங்குடி மக்களுக்கும், தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும், ஏன் உலகத்துக்கே பேரிழப்பாகும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதன் உடல்நிலைக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன்.எம்.எஸ்.சுவாமிநாதன் “பசுமை புரட்சியின் தந்தை” என்று எல்லோராலும் அழைக்கப்பட்டவர். இன்று விவசாயத்தில் பல்வேறு வளர்ச்சியை கண்டுள்ளோம் என்றால் அதற்கு அடித்தளம் … Read more

உலகின் 3 பெரிய பொருளாதார  நாடுகளில் இந்தியா இடம்பெறும்: துடிப்பான குஜராத் மாநாட்டில் பிரதமர் மோடி உறுதி

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 20-வது துடிப்பான குஜராத் சர்வதேச மாநாடு நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: நாட்டின் வளர்ச்சி இன்ஜினாக குஜராத்தை மாற்ற துடிப்பான குஜராத் சர்வதேச மாநாடு 2003-ல் தொடங்கப்பட்டது. அதன் பிறகுதான் ஆயிரக்கணக்கான வெற்றிக் கதைகள் உருவாகி உள்ளன. கடந்த நூற்றாண்டில் குஜராத் வர்த்தகர்கள் நிறைந்த மாநிலமாக விளங்கியது. இப்போது தொழில் உற்பத்தி முனையமாக உருவெடுத்துள்ளதால் குஜராத்துக்கு புதிய அடையாளம் கிடைத்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில், வாகன … Read more

நாளை தமிழக பேருந்துகள் கர்நாடக எல்லை வரை மட்டுமே இயக்கம்

சென்னை நாளை கர்நாடகாவில் பந்த நடைபெற உள்ளதால் தமிழக பேருந்துகள் கர்நாடக எல்லை வரை மட்டுமே இயக்கப்பட உள்ளன. கர்நாடக அரசு அம்மாநிலத்தில் பருவமழை பொய்த்துப்போன நிலையிலும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்குக் காவிரி நீரை திறந்து விட்டது. கர்நாடகத்தில் இதைக் கண்டித்து போராட்டங்கள் வெடித்துள்ளன. கடந்த 18 அன்று மாண்டியாவில் விவசாயிகள் முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அங்கு விவசாயிகள் தினமும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்று முன்தினம் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்பட்டதைக் கண்டித்து … Read more

நாட்டின் சிறந்த சுற்றுலா கிராமமாக காந்தளூர் தேர்வு| Kanthalur has been selected as the best tourist village in the country

மூணாறு:கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் கடைக்கோடியில் தமிழக எல்லையோரம் உள்ள காந்தளூர் ஊராட்சியில் காய்கறி, பழ சாகுபடி முக்கிய தொழில். ஆப்பிள் உட்பட பல்வேறு பழங்கள் கால நிலைக்கு ஏற்ப விளையும் என்பதால், சுற்றுலா பயணியர் விரும்பி வாங்கிச் செல்வர். அப்பகுதி சமீப காலமாக சுற்றுலாவில் பெரும் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில், சிறந்த சுற்றுலா கிராமங்களை தேர்வு செய்து, மத்திய அரசு விருது வழங்கி வருகிறது. நாட்டில் உள்ள 2.5 லட்சம் ஊராட்சிகளில், 767 ஊராட்சிகள் … Read more

சாயாவனம்: மலையாள இயக்குனரின் தமிழ் படம்

மலையாளத்தில் 35க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளவர் அனில். மம்முட்டி நடித்த 7 படங்களை இயக்கி உள்ளார். அனில் தமிழில் இயக்கி உள்ள படம், 'சாயாவனம்'. தாமோர் சினிமா சார்பில் சந்தோஷ் தாமோதரன் தயாரித்து வில்லனாக நடிக்கிறார். சவுந்தரராஜா, தேவானந்தா, அப்புக்குட்டி, ஜானகி, வெற்றிவேல் ராஜா, மேத்யூ மம்ப்ரா நடிக்கின்றனர். எல்.ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, பொலி வர்கீஸ் பாடல்களுக்கு இசை அமைக்கிறார். எல்.வி.முத்து கணேஷ் பின்னணி இசை அமைக்கிறார். படம் குறித்து அனில் கூறுகையில் ‛‛வருடம் முழுவதும் அதிக … Read more

Actor Suriya: வணங்கான் படத்தில் 5 கோடி ரூபாய் நஷ்டம்.. ஆனாலும் தலை தெறிக்க ஓடிய சூர்யா!

சென்னை: இயக்குநர் பாலாவின் வணங்கான் படத்தில் தற்போது அருண் விஜய் லீட் கேரக்டரில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் முன்னதாக நடிகர் சூர்யா இணைந்திருந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் படத்திலிருந்து விலகினார். இதையடுத்து படத்தில் அருண் விஜய் கமிட்டானார். படத்தின் சூட்டிங் கன்னியாகுமரி, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. சூர்யாவை

உலக புதுமை குறியீடு தரவரிசையில் 40-வது இடத்தில் இந்தியா

புதுடெல்லி, ஜெனீவாவில் உள்ள உலக அறிவுசார் சொத்து அமைப்பு. ஆண்டுதோறும் உலக அளவில் புதுமை குறியீட்டு எண் தரவரிசையை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில், 132 நாடுகள் கொண்ட பட்டியலில், இந்தியா தனது 40-வது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டும் 40-வது இடத்தில்தான் இருந்தது. கடந்த 2015-ம் ஆண்டு 81-வது இடத்தில் இருந்த இந்தியா, தொடர்ந்து முன்னேறி, 40-வது இடத்தை அடைந்திருப்பதாக ‘நிதி ஆயோக்’ தெரிவித்துள்ளது. அறிவு … Read more