ஹலசூரு பான் பெருமாள் கோவிலில் 6, 7ல் கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா| Krishna Janmashtami Festival on 6th and 7th at Halasuru Pan Perumal Temple

ஹலசூரு,: ஹலசூரு பான்பெருமாள் கோவில் கிருஷ்ணா மந்திரில் நாளையும், நாளை மறுநாளும் கிருஷ்ண ஜென்மாஷ்டமி, கருட வாகன உற்சவம் நடக்கிறது. கிருஷ்ண ஜென்மாஷ்டமியை ஒட்டி, நாளை காலையில் கிருஷ்ணருக்கு அபிஷேகம், அலங்காரம், பிரபந்த சேவாகாலம், சாத்துமுறை, ஆரத்தி தீர்த்த பிரசாதம் வினியோகம்; மாலையில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி கருட வாகன உற்சவம் நடக்கிறது. 7ம் தேதி காலையில் கிருஷ்ண ஜெயந்தி டோலோற்சவம், அபிஷேகம், பிரபந்த சேவாகாலம், சாத்துமுறை, ஆரத்தி தீர்த்த பிரசாதம் வினியோகிக்கப்படுகிறது. பக்தர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு … Read more

முன்பதிவில் 'ஜவான்' படத்திற்கு வரவேற்பு

அட்லி இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ஷாரூக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடிப்பில் நாளை மறுதினம் செப்டம்பர் 7ம் தேதி வெளியாக உள்ள ஹிந்திப் படம் 'ஜவான்'. இப்படம் தமிழ், தெலுங்கிலும் டப்பிங் ஆகி வெளியாக உள்ளது. இப்படத்திற்கான முன்பதிவு ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரையிலும் இந்தியாவில் மட்டும் ஆன்லைனில் 3 லட்சம் முன்பதிவை நெருங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பு ஆன்லைனில் அதிகமான முன்பதிவு செய்யப்பட்ட படங்களில் ஷாரூக்கான் நடித்த 'பதான்' … Read more

Nelson Dilipkumar – என்னது ஜெயிலர் படம் விக்ரம் பட காப்பியா?.. நெல்சன் திலீப்குமார் கொடுத்த சூப்பர் விளக்கம்

சென்னை: Nelson Dilipkumar (நெல்சன் திலீப்குமார்) விக்ரம் படத்தின் காப்பிதான் ஜெயிலர் படம் என்று கூறப்பட்ட சூழலில் அதுகுறித்து நெல்சன் திலீப்குமார் விளக்கமளித்திருக்கிறார். இரண்டு வருடங்களுக்கு பிறகு ரஜினி நடித்த படம் ஜெயிலர் கடந்த மாதம் 10ஆம் தேதி வெளியானது. இதனால் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் திரையரங்குகளுக்கு சென்றனர். அவர்களின் ஆவலை படமானது பூர்த்தி செய்திருக்கிறது. ஒவ்வொரு

விவசாயத்தை நவீனமயப்படுத்தும் திட்டத்தின் கீழ் புளியங்குளம் பிரதேசத்தில் மிளகாய் உற்பத்தி

உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் விவசாய அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் விவசாயத்தை நவீன மயப்படுத்தப்படும் திட்டத்தின் கீழ் திறப்பனை பிரதேச செயலக பிரிவின் 531 புளியங்குளம் கிராம சேவகர் பிரிவை உள்ளடக்கியதாக மிளகாய் உற்பத்தித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் முதற் கட்டத்தின் கீழ் பயனாளிகள் 25பேருக்காக அரை ஏக்கர் நிலத்தில் மிளகாய் உற்பத்திக்காக 16இலட்சம் பெறுமதியான மிளகாய் விதைகள், உரம், விவசாய இரசாயனம், பாதுகாப்பு வேலி, பொலிதீன் மற்றும் கழிவகற்றும் பாத்திரங்கள் என்பன வழங்கப்பட்டன. இவ்வுற்பத்தி மிகவும் … Read more

சனாதனம் குறித்த உதயநிதியின் பேச்சு வெறுக்கத்தக்கது: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: சனாதனம் குறித்த உதயநிதியின் பேச்சு வெறுக்கத்தக்கது என்றும், எந்த மதத்தைச் சேர்ந்த மக்களும் அதை விரும்ப மாட்டார்கள் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை அம்பத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “திராவிடம் என்று கூறுவார்கள், பிறகு சனாதனம் என்று கூறுவார்கள். இதை இரண்டையும் கூறி திமுக மக்களை ஏமாற்றி வருகிறது. இதுபோன்ற செயல்களை வன்மையாகக் கண்டிக்கிறோம். சனாதனம் குறித்த உதயநிதியின் பேச்சை எந்த மதத்தைச் சார்ந்தவர்களும் விரும்ப மாட்டார்கள். அவரது பேச்சு … Read more

''என்னை எதிர்ப்பவர்களைக்கூட நான் ஆசிரியர்களாகவே கருதுகிறேன். ஏனெனில்…'': ராகுல் காந்தி

புதுடெல்லி: தன்னை எதிர்ப்பவர்களைக் கூட தான் ஆசிரியர்களாகவே கருதுவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஆசிரியர் தினத்தை ஒட்டி ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், “தேசிய ஆசிரியர் தினமான இன்று, அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது மரியாதையான வணக்கங்கள். இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளில் அவருக்குப் பணிவான அஞ்சலி. குருவின் இடம் வாழ்க்கையில் மிக உயர்ந்தது. அவர் உங்கள் வாழ்க்கையின் பாதையை ஒளிரச் செய்கிறார். சரியான திசையில் செல்ல … Read more

உதயநிதிக்கு வயசு பத்தல.. சனாதன சர்ச்சைக்கு இதுதான் காரணமா? – ஷாக் தந்த எடப்பாடி..

உதயநிதி ஸ்டாலினின் சனாதன ஒழிப்பு பேச்சு இந்திய அளவில் விவாதப் பொருளாக உருவெடுத்த நிலையில், அவருக்கு பாஜக மற்றும் வலதுசாரி அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென டெல்லி, பிகார் உள்ளிட்ட இடங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், உதயநிதியின் பேச்சு குறித்து அதிமுக தரப்பில் எவ்வித அதிகாரப்பூர்வ கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “சனாதன ஒழிப்பு என்று உதயநிதி … Read more

பிரசாந்த் கிஷோர்: பூனைக்குட்டி வெளியே வந்தது… ஒரே நாடு ஒரே தேர்தலும், பாஜக உடன் அடித்த பல்டியும்!

இந்திய அரசியல் களம் அடுத்த தேர்தலுக்கு தயாராகி வருகிறது. அது 2024 மக்களவை தேர்தல் மட்டுமா? இல்லை அனைத்து மாநில சட்டமன்ற தேர்தல்களும் ஒன்றாக வருகின்றனவா? என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுகிறது. இதற்கான வேலைகளில் மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டி வருவதை பார்க்க முடிகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆராய குழு, 5 நாட்கள் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆகியவை மிகுந்த கவனம் பெறுகின்றன. பிரசாந்த் கிஷோர் கருத்துஇந்நிலையில் பிரபல தேர்தல் … Read more

குவைத் எண்ணெய் கிணறுகள்… ரூ.4.65 லட்சம் கோடியில் தாறுமாறு பிளான்… ஆடிப் போன உலக நாடுகள்!

வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத், பெட்ரோலிய வளத்தின் அடிப்படையிலான பொருளாதாரத்தை கொண்டுள்ளது. உலகிலேயே பண மதிப்பில் உச்சத்தில் இருக்கும் நாடு என்றால் அது குவைத் தான். இதற்கு அடிப்படையான காரணம் எண்ணெய் வளம். தேசிய வருவாயை எடுத்து கொண்டால் சர்வதேச அளவில் 5வது இடத்திலும், ஜிடிபி மதிப்பில் எடுத்து கொண்டால் 12வது இடத்திலும் இருக்கிறது. ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி… இந்தியாவிற்கு என்ன லாபம் கொழிக்கும் எண்ணெய் வளம் ஒவ்வொரு ஆண்டும் எண்ணெய் வளத்தை மேம்படுத்தவும், இதுதொடர்பாக … Read more