Apache RTR 310 Launch details – டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310 பைக்கின் எதிர்பார்ப்புகள்

நேக்டூ ஸ்டைலை பெற்ற டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310 பைக்கினை விற்பனைக்கு ஜனவரி 6 ஆம் தேதி வெளியிட உள்ளது. பிஎம்டபிள்யூ மோட்டார்டு- டிவிஎஸ் மோட்டார் கூட்டணியில் தயாரிக்கப்பட்டுள்ள 310cc பிரிவில் வருகின்ற அப்பாச்சி RTR 310 மாடல் விற்பனையில் உள்ள பிஎம்டபிள்யூ G 310 R என்ஜினை பகிர்ந்து கொள்ள உள்ளது. RTR 310 பைக்கில் விற்பனையில் உள்ள ஜி310ஆர் மாடலை விட சற்று மாறுபட்ட வகையிலான டிசைன் அம்சங்களை பெற்றதாக வரவுள்ளது. TVS Apache … Read more

இணையம் மூலம் பாதிப்புக்குள்ளாகும் அப்பாவி மக்களுக்கு சட்டத்தின் மூலம் நியாயமான தீர்வு..

இணையவழி முறைகளின் பாதுகாப்புப் பற்றிய சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். இதற்கமைய, இதன் பின்னர், இணையத்தின் மூலம் பல்வேறு துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டத்தின் மூலம் நியாயமான தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (05) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு … Read more

புழல் மத்திய சிறையில் கஞ்சா, போதைப்பொருள்கள் சப்ளை… சிறைக்காவலர் சிக்கியதன் பின்னணி என்ன?!

தண்டனைக் கைதிகள், விசாரணைக் கைதிகள் என பிரிக்கப்பட்டு, சென்னை மத்திய புழல் சிறையில் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இதுதவிர பெண்களுக்கு என தனி சிறையும் இருக்கிறது. புழல் சிறையில் கஞ்சா, செல்போன் உள்ளிட்டவை சிக்குவது வாடிக்கை. சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்குத் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்கள், செல்போன்கள் எப்படி கிடைக்கின்றன என்று சிறைத்துறையும், தமிழக போலீஸாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்காக சிறைக்கைதிகளிடம் தனிப்படை போலீஸார் அடிக்கடி சோதனை நடத்துவதுண்டு. இந்த நிலையில் கடந்த 4-ம் தேதி தனிப்படையினர் சிறைக்கைதிகளின் அறைகளைச் … Read more

துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி உறுப்பினரை சேர்க்க வேண்டிய கட்டாயம் இல்லை: ஆளுநருக்கு தமிழக அரசு கடிதம்

சென்னை: ‘மாநில பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை நியமிக்க யுஜிசி விதிகளை மட்டும் பின்பற்றினால் போதுமானது. யுஜிசி சார்பில் உறுப்பினரை சேர்க்க வேண்டும் என்ற கட்டாய விதிமுறை இல்லை’ என துணைவேந்தர் நியமன விவகாரம் குறித்து ஆளுநருக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கோவை பாரதியார் பல்கலைக்கழகம், கல்வியியல் பல்கலைக்கழகம் மற்றும் அண்மையில் காலியான சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பணியிடங்கள் என 3 பல்கலைக்கழக துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக இருந்து வருகின்றன. துணைவேந்தர் தேடுதல் … Read more

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தல்: 47 கட்சிகளுக்கு பிஆர்எஸ் கட்சியின் கவிதா கடிதம்

ஹைதராபாத்: நீண்ட காலமாக கிடப்பிலிருக்கும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை வரும் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற வலியுறுத்தி பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 47 கட்சிகளுக்கு பிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த கவிதா கடிதம் எழுதியுள்ளார். தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகளும், பாரத் ராஷ்ட்ரீய சமிதி கட்சியைச் சேர்ந்த எம்எல்சிவுமான கவிதா, பெண்கள் இட ஒக்கீடு மசோதா நிறைவேற்றப்பட வேண்டியது குறித்து தலைவர்களுக்கு தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளார். அதில், பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்துவது தனித்துவமானதில்லை, மாறாக அரசியல் … Read more

இந்தியாவுக்கு பெயர் மாற்றம்: உடனே லைனுக்கு வந்த ஆர்.என்.ரவி – இது மாதிரி இன்னொன்னு நடந்ததே!

குடியரசுத் தலைவர் அனுப்பிய அழைப்பிதழில் இந்திய குடியரசு என்று குறிப்பிடுவதற்கு பதில் பாரத் குடியரசு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் நாடு முழுவதும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. குடியரசுத் தலைவர் அனுப்பிய அழைப்பிதழ் கருத்தை வரவேற்கும் வகையில் அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ ஷர்மா தனது டிவிட்டர் பக்கத்தில் வரவேற்பு தெரிவித்துள்ளார். தன்னைப் பற்றிய குறிப்பிலும், அசாம் முதலமைச்சர் – பாரத் என்றே குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டிலிருந்து ஆளுநர் ஆர்.என்.ரவியும் இந்தியா என்ற வார்த்தைக்கு பதில் பாரத் என்ற வார்த்தையை … Read more

திருப்பதியில் தமிழக பக்தர்களுக்கு சூப்பர் ஆஃபர்.. அலைமோதும் கூட்டம்… நிரம்பி வழியும் வைகுந்தம் காம்ப்ளக்ஸ்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சர்வ தரிசனத்திற்கு பக்தர்கள் 24 மணிநேரத்திற்கு மேல் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திருப்பதிதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 18 ஆம் தேதி வருடாந்திர பிரமோற்சவம் தொடங்கவுள்ளது. வரும் 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த பிரமோற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். பிரமோற்சவம் நடைபெறும் 9 நாட்களுமே ஒவ்வொரு நாளும் ஒரு வாகனம் என சாமி ஊர்வலம் நடைபெறும்.சாமி வீதி உலாகாலை மற்றும் இரவு என இரு … Read more

புதின் உடன் சந்திப்பு : கவச ரயிலில் ரஷ்யா செல்லும் கிம் ஜோங் உன் – ஓ கதை அப்படி போகுதா?

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரில் உக்ரைன் பக்கமே பல நாடுகள் நிற்க, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு ஆதரவாக சில நாடுகளே உள்ளன. இந்த நிலையில் ரஷ்யாவுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளார் வடகொரிய அதிபர் கிம் ஜோன் உன். இரு நாடுகளும் பரஸ்பர உதவிகளை நாடுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் போர்ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தொடர்ச்சியாக போர் நடைபெற்று வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் … Read more

'KH 233' அப்டேட் இன்னைக்கு வருமா.?: எச். வினோத் பிறந்தநாளில் கமல் போட்ட ட்விட்.!

தமிழ் சினிமாவில் ‘சதுரங்க வேட்டை’ படத்தின் மூலமாக அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த ஒரு இயக்குனர் எச். வினோத். ஆர்ப்பாட்டம் இல்லாத வசனங்கள், அமைதியான ஹீரோ என தனது மேக்கிங் ஸ்டைலால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் இவர். இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் இயக்குனர் எச். வினோத்துக்கு பலரும் வாழ்த்துக்களை பகிர்ந்த வண்ணம் உள்ளனர். ‘சதுரங்க வேட்டை’ படத்தின் மூலம் கோலிவுட் சினிமாவில் நம்பிக்கைக்குரிய இயக்குனராக நுழைந்த வினோத், அதனை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் ‘தீரன் … Read more

Realme Narzo 60X Launch : 33W ஃபாஸ்ட் சார்ஜிங் , MediaTek ப்ராசஸர் என அல்டிமேட் அம்சங்களுடன் நாளை வெளியாகிறது Realme Narzo 60X!

ரியல்மி நிறுவனம் வெளியிட்டுள்ள போஸ்டரின்படி நாளை (செப்டம்பர் 6) மதியம் 12 மணியளவில் Realme Narzo 60X மாடலை இந்தியாவில் வெளியிட உள்ளது. இதோடு சேர்த்து, Realme Buds T300ம் வெளியாக உள்ளது. நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இந்த மொபைலில் 33W சார்ஜிங் வசதி, 5000mAh பேட்டரி ஆகியவை இடம்பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், இந்த மொபைலில் வேறு என்னென்ன சிறப்பம்சங்கள் இடம்பெறலாம் என்று இந்த தொகுப்பில் காணலாம். ​ரியல்மி நார்சோ 60Xரியல்மி வெளியிட்டுள்ள போஸ்டரில் இடம்பெற்றுள்ள … Read more